YouTurn

சீமான் குறித்துப் பரவும் போலி நியூஸ் கார்டுகளின் தொகுப்பு!

சீமான் குறித்துப் பரவும் போலி நியூஸ் கார்டுகளின் தொகுப்பு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீமான் சாவர்க்கர் குறித்து பெருமையாகப் பேசியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை.

பரவிய செய்தி

விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர் பெரியார் அவரை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டாமா? -நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

seeman savarkar fake news card

X link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களைப் பல மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். 

அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் சாவர்க்கருக்கும் ஆதரவாகச் சீமான் பேசியதாக ’புதிய தலைமுறை’ நியூஸ் கார்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் ’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்’ என வெற்றிமாறன் விமர்சித்ததாகவும் ’நியூஸ் 18 தமிழ்நாடு’ நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது.

seeman vetrimaran fake news card

X link

சாவர்க்கர் குறித்து சீமான் பெருமையாகப் பேசியதாகப் பரவும் அதே நியூஸ்கார்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

stalin savarkar fake news card

X link

உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் மற்றும் சீமான் இருவரும் சாவர்க்கர் குறித்துப் பேசியதாகப் பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளனரா எனத் தேடியதில், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. புதிய தலைமுறை ஊடகமும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. 

பரவக் கூடிய நியூஸ் கார்டு ஒன்றில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் பிரச்சாரத்தில் அப்படி எதுவும் பேசவில்லை என்பது அவர் பேசிய முழுமையான வீடியோவை பார்க்கும் போது அறிய முடிந்தது.

Image

இதேபோன்று விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போராடியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாகவும் பரப்பப்படுகிறது. அவர் அப்படி எங்கும் பேசவில்லை. புதிய தலைமுறையும் அப்படி எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. இவற்றிலிருந்து ஸ்டாலின் மற்றும் சீமான் குறித்து பரவக் கூடிய நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது. 

அடுத்ததாக, ‘சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்’ என இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்ததாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்துத் தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

மேற்கொண்டு தேடியதில், இதே போன்ற கருத்தைச் சீமான் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர்.திருமாவளவன் பேசி இருந்ததை புதிய தலைமுறை ஊடகத்தில் காண முடிந்தது. 

#Thirumavalavan | #VCK | #Seeman | #NTK pic.twitter.com/TRwjZKCMgM

— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 25, 2025

அதில், ”சீமானின் போக்கு மிகக் கவலை அளிக்கக் கூடியவையாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர் ஏன் இவ்வாறு செயல்படுகிறார், இவ்வாறு பேசுகிறார் என்று விளங்கவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. அவரது போக்கு தமிழ்நாடு மக்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. மிகவும் ஆபத்தான அரசியலை அவர் பேசுகிறார். அது அவருக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. அவரை பின்பற்றும் தோழர்கள் இவற்றை மிகக் கவனமாக அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதிலிருந்து சீமான் குறித்து மேற்கண்ட கருத்தை வெற்றிமாறன் கூறவில்லை என்பதை அறிய முடிகிறது. இதுவும் போலியாக உருவாக்கப்பட்டது.

முடிவு: 

சீமான் சாவர்க்கர் குறித்து பெருமையாக எதுவும் பேசவில்லை. அவர் குறித்து புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பரவும் நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…