YouTurn

சீமான் துப்பாக்கி பயிற்சி குறித்த படங்களின் உண்மை பின்னணி என்ன? ஆதாரம் இதோ!

சீமான் துப்பாக்கி பயிற்சி குறித்த படங்களின் உண்மை பின்னணி என்ன? ஆதாரம் இதோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இப்படங்கள் ஈழத்தில் நடந்த எள்ளாளன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை. அவை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

ஈழம் சென்ற சீமானுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

seeman gun shooting practice

X link | Archive link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நீண்ட காலமாக ஒரு புகைப்படம் உள்ளது. இப்புகைப்படம் உண்மையானது கிடையாது என்றும் இதனை எடிட் செய்து உருவாக்கியது தான் தான் என்றும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தெரிவித்தார். 

ஆகச் சிறந்த புனிதர்

சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்ததாக சொல்லும் படம்.

இதன் தொடர்ச்சியாகச் சீமான் ஈழம் சென்ற போது ஆயுதப் பயிற்சி பெற்றதாக சில புகைப்படங்களை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி உட்படப் பலரும் பகிர்ந்தனர். சீமான் பல மேடைகளில் தான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாகப் பேசியுள்ளார்.

இதற்கிடையில் சீமான் பிரபாகரனைச் சந்தித்த போது உடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவர் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தார். விடுதலைப் புலிகள் சார்பில் 2008ல் எடுக்கப்பட்ட எள்ளாளன் என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அளித்த நேர்காணலில், சீமான் - பிரபாகரன் சந்திப்பின் போது நடந்தவையாகச் சீமான் சொல்பவை பொய்யானவை. துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. கிட்டத்தட்ட ஆறு படங்கள் எடுக்கப்பட்டன. அதில் இரண்டு படங்களை நான் தான் எடுத்தேன். மற்றவை அமரதாஸ் என்ற புகைப்பட கலைஞர் எடுத்தார். அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ளார் எனக் கூறியிருந்தார்.

image.png

மேற்கொண்டு புகைப்பட கலைஞர் அமரதாஸ் அவர்களை  ’சன் நியூஸ்’  நேர்காணல் செய்தது. சீமான் துப்பாக்கியுடன் இருக்கும் படங்கள் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுக்கப்பட்டவை என்பதை அவரும் உறுதி செய்தார். படப்பிடிப்பு தளத்திலிருந்த துப்பாக்கிகளைக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதலில் துப்பாக்கியை முறையாகப் பிடிக்காததினால், படப்பிடிப்பு தளத்திலிருந்த போராளி ஒருவர் அவருக்கு எப்படிப் பிடிக்க வேண்டுமென கற்றுக் கொடுத்தார். நாங்கள் இருந்த இடம் பயிற்சி பெறுவதற்கான இடம் கிடையாது. அவர் ஒரு தோட்டாவைக் கூட சுடவில்லை என்றார். மேலும் அப்படங்களில் சீமானுக்குப் பின்னால் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படும் தெர்மாகோல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

சீமானுக்கு பின்னால் உள்ள தெர்மாகோல்

உண்மை என்ன?

சீமான் ஈழத்தில் துப்பாக்கி பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் புகைப்படங்களைப் பற்றி ஆராய சந்தோஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு புகைப்படங்களின் மூலப்பிரதிகளை கேட்டோம். 

சீமான் துப்பாக்கி வைத்துள்ள படங்களும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்தார். அவை ஒரே புவியியல் சூழலில் எடுக்கப்பட்டவை என்பதைப் படங்களை ஒப்பிடும் போது அறிய முடிந்தது. மேற்கொண்டு அப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட தேதி, நேரம் போன்றவற்றை அறிய (EXIF is short for Exchangeable Image File) ’Linang data’ என்ற தளத்தின் மூலம் ஆய்வு செய்தோம். 

சீமான் துப்பாக்கி வைத்துள்ள படங்கள் 2008, பிப்ரவரி 15ம் தேதி 10.04 மணி முதல் 10.06 மணி வரையிலான நேரத்தில் எடுக்கப்பட்டவையாக உள்ளன. அமரதாஸ் தனது நேர்காணலில் கூறும் போதும் சீமான் பத்து மணி வாக்கில் தான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததாகக் கூறுகிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களும் பிப்ரவரி 15ம் தேதி எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிந்தது. அதில் அமரதாசும் உள்ளார்.

மேற்கண்ட புகைப்படங்கள் அனைத்தும் ’NIKON D70s’ என்ற ஒரே கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு இருந்தாளும் அவை உண்மையான துப்பாக்கிகளா அல்லது போலியானவையா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். 

எள்ளாளன் திரைப்படம் வெளியீட்டையொட்டி அதன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேசிய வீடியோ ஒன்று ’Daily Motion’ தளத்தில் உள்ளது. படப்பிடிப்பிற்கு உண்மையான துப்பாக்கிகள் தான் பயன்படுத்தப்பட்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அவை சுடுவதற்கோ, பயிற்சி எடுப்பதற்கோ பயன்படுத்தப்படவில்லை. 

ஈழம் சென்ற சீமான் படப்பிடிப்பு தளத்தில் உண்மையான துப்பாக்கிகளைப் பார்த்ததும் அவற்றைக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு படம் எடுத்துள்ளார். ஆனால், அவற்றைப் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் என நீண்டகாலமாகத் தவறாகப் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

இப்புகைப்படம் மட்டுமின்றி சீமான் ஈழம் சென்ற போது நடந்ததாகக் கூறும் பல கதைகள் குறித்த உண்மையை அமரதாஸ் மற்றும் சந்தோஷ் தங்களது நேர்காணலில் கூறியுள்ளனர்.

முடிவு: 

சீமான் துப்பாக்கியுடன் இருக்கும் படங்கள் ஈழத்தில் நடந்த எள்ளாளன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை. அவை விடுதலை புலிகளுடனான பயிற்சியின் போது எடுக்கப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.