YouTurn

இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து சீமான் சொல்லும் பொய்!

இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து சீமான் சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

”சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் மீனவனுக்கு இந்த அரசு ஒரு லட்சம் ரூபாய் கூட கொடுப்பதில்லை. பணியில் இறந்த போன இராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் குட கொடுக்கவில்லை. ஆனால் கள்ளச் சாராயம் குடித்தும், நடிகரை பார்க்கச் சென்றும் இறந்தால் 10 லட்சம் கொடுக்கிறது” - சீமான். 


YouTube Link

விரிவான விளக்கம்

கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘நாட்டு பாதுகாப்பிற்காக எல்லையில் நின்று போராடி இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழ்நாடு அரசு கொடுப்பதில்லை. சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கு இந்த அரசு ஒரு லட்சம் ரூபாய் கூட கொடுப்பதில்லை. ஆனால் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், நடிகரை பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்க இறந்தவர்களுக்கும் இந்த அரசு 10 லட்சம் வரை நிதி கொடுக்கிறது’ என்று பேசினார்.



உண்மை என்ன?


உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை வழங்கியது குறித்த செய்திகளைத் தேடினோம். ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் 2027 பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



அதன்படி, தூத்துகுடி மணப்பாடு என்னும் பகுதியில் நடுக்கடலில் தனியார் படகில் சென்று மூழ்கி இறந்தபோன 9 பேரின் குடும்பங்களுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கினார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

image.png


DT NEXT’ செய்தித்தளத்தில் 2017 ஏப்ரல் மாதம் வெளியான செய்தியின் படி, ’2014ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் 80 படகுகளை சிறைபிடித்தது. அதில் 64 படகு விடுவிக்கப்பட்டுவிட்டது. திரும்பி வராத 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக’ தெரியவருகிறது.


2021 ஜனவரி மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகில் இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில் 4 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. 


image.png


மேலும் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2025-26 ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.00 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இறந்த மீனவர் அந்த குடும்பத்தின் ஒரே பொருளாதார ஆதாரமாக (sole bread-winner) இருந்தால், ரூ.5.00 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதேபோல், மீனவர்கள் கடுமையான அல்லது சிறிய காயங்களுக்கு உள்ளானால், முறையே ரூ.50,000 மற்றும் ரூ.20,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் எந்த மீனவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது. 


அதேபோல், இராணுவத்தில் பணியாற்றும் போது இறந்த தமிழ்நாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என்பதை மறைத்து சீமான் பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என்று நமது ‘YouTurn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம். 


முடிவு:


சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கும் பணியில் இறந்த போன இராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு சரியான நிவாரணம் கொடுக்கவில்லை என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் சீமான்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க