YouTurn

டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!

டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்டிராவில் தான் அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்துராமலிங்கத்திற்கும் மேற்கு வங்காளத்தில் சிலை உள்ளது.

பரவிய செய்தி

அம்பேத்கருக்கு முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் சிலை வைக்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய முத்துராமலிங்கத்திற்கு மேற்கு வங்கத்தில் கூட சிலை இல்லை. - சீமான்


image.png

Video link

விரிவான விளக்கம்

சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்குத் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு சிலை இல்லை எனப் பேசியிருந்தார். ஆனால், 1968-ம் ஆண்டே திமுக-வின் முதல் ஆட்சிக் காலத்தில் வ.உ.சி.-க்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டுவிட்டது என்பதை யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.



இந்நிலையில் வ.உ.சி.-யின் நினைவு நாளான நேற்றைய தினம் திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அதில், அம்பேத்கருக்கு முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் சிலை வைக்கப்பட்டது என்றார். மேலும், ”சுபாஷ் சந்திரபோஸை தமிழருக்கு அறிமுகப்படுத்தியது யார்? எங்கள் தாத்தா தெய்வத்திருமகன் (முத்துராமலிங்கம்) தானே? எங்கள் தாத்தாவிற்கு மேற்கு வங்காளத்திலாவது ஒரு சிலை உள்ளதா?” என்றும் கூறியுள்ளார்.


உண்மை என்ன?


மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரிலுள்ள டாக்டர்.அம்பேத்கரின் சிலை ஏன் சிறப்பு வாய்ந்தது என்கிற தலைப்பில் ‘Etv Bharat’ ஊடகத்தில் 2023, ஏப்ரல் மாதம் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மராத்திய மொழியில் வெளியாகியிருந்த அக்கட்டுரையை மொழிபெயர்த்துப் படித்தோம்.


image.png


அதில், கோலாப்பூரில் உள்ள பிந்து சௌக் என்னும் இடத்தில் 1950, டிசம்பர் 9-ம் தேதி அம்பேத்கரின் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை அம்பேத்கர் வாழும் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. மேலும் இது தான் முதன் முதலில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்ட சிலை என்றும் அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


Google Street View மூலம் அந்த சிலை அமைந்துள்ள இடத்தையும் அங்குள்ள அம்பேத்கர் சிலையைப் பிறர் எடுத்துப் பதிவிட்ட புகைப்படங்களையும் காண முடிந்தது. சிலைக்குக் கீழே உள்ள கல்வெட்டிலும் 1950-ல் அமைக்கப்பட்ட சிலை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இவற்றிலிருந்து அம்பேத்கருக்கு முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் சிலை அமைக்கப்பட்டது எனச் சீமான் சொன்ன தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது. 


இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்திற்கு மேற்கு வங்காளத்தில் சிலை இல்லை எனச் சொன்ன தகவல் குறித்த உண்மையையும் தேடினோம். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா, கொல்கத்தாவின் சாந்தினி சாக் பகுதியில் முத்துராமலிங்கத்திற்குச் சிலை ஒன்று இருக்கிறது. ‘The Indian Express’ தளத்தில் இந்த சிலை தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. 


image.png


இச்சிலை 2012, ஜனவரி 8-ம் தேதி ’அனைத்து இந்திய ஃபார்வர்டு பிளாக்’ கட்சியின் பெங்கால் குழு பொதுச் செயலாளர் அசோக் கோஷ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. Google Street View உதவியுடன் அச்சிலை அமைந்துள்ள இடத்தைக் காண முடிகிறது. 


image.png


இதில் இந்து மேற்கு வங்கத்தில் முத்துராமலிங்கத்திற்குச் சிலை இல்லை எனச் சீமான் சொன்னதும் தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது. 


மேலும் படிக்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. சிலை குறித்து சீமான் சொன்ன பொய்கள்!


முடிவு:


தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் அம்பேத்கருக்குச் சிலை அமைக்கப்பட்டது என்றும் மேற்கு வங்கத்தில் முத்துராமலிங்கத்திற்குச் சிலை இல்லை என்றும் சீமான் சொன்ன தகவல்கள் தவறானவை. மகாராஷ்டிராவில் தான் அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்துராமலிங்கத்திற்கும் மேற்கு வங்காளத்தில் சிலை உள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.