யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்று பரவி வரும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு வெளியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றியான செய்தி வந்துள்ளது. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் விசிக, காங்கிரசு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என செய்தி.
விரிவான விளக்கம்
"அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு வெளியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றியான செய்தி வந்துள்ளது" என்று கூறி 23 டிசம்பர் 2025 அன்று வெளியானது போல் சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
#BigBreaking அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு வெளியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றியான செய்தி வந்துள்ளது
மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் விசிக,காங்கிரசு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என செய்தி. pic.twitter.com/XtKPST2e8p
உண்மை என்ன?
பரவி வரும் இந்த நியூஸ் கார்டு குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் மார்ச் 09, 2021 அன்று இதே நியூஸ் கார்டு பதிவாகி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இது தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: திமுக கூட்டணி கட்சிகள் விவரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: திமுக கூட்டணி கட்சிகள் விவரம்!
#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews | @arivalayam pic.twitter.com/7RukRBurcN
மேலும் பரவி வரும் செய்தியில் திமுகவிற்கு 184 தொகுதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான நியூஸ் கார்டில் திமுகவிற்கு 174 தொகுதிகள் என்று குறிப்பிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற காட்சிகளின் தொகுதிகளிலும் மாறி இருப்பதை பார்க்கமுடிந்தது. இதிலிருந்தது பரவி வரும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது.
முடிவு:
எனவே, திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்று பரவி வரும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்பப்படுவது உறுதியானது.