YouTurn

விமானத்தில் அசைவம் சாப்பிட்டதால் வாக்குவாதம் என பரப்பப்படும் வீடியோ! உண்மையா? சித்தரிக்கப்பட்டதா?

விமானத்தில் அசைவம் சாப்பிட்டதால் வாக்குவாதம் என பரப்பப்படும் வீடியோ! உண்மையா? சித்தரிக்கப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

விமான பயிற்சி நிறுவனம் பயிற்சி வகுப்புகளுக்காக உருவாக்கிய சித்தரிக்கப்பட்ட (Scripted Video) வீடியோ இது.

பரவிய செய்தி

நாங்கள் PURE VEGETARIAN. எங்கள் எதிரில் சிக்கன் சாப்பிடக்கூடாது. வட இந்திய சனாதனிகள்!

எம்மா தாயே .... தென்னிந்தியா பக்கம் வந்துடாத


image.png


Archive Link


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

’விமான பயணத்தின் போது ஒரு பெண் அருகில் அமர்ந்திருக்கும் இளைஞர், சிக்கன் சாப்பிடுகிறார். ‘நான் சுத்த சைவம். என் அருகில் அமர்ந்து நீங்கள் அசைவம் சாப்பிடக்கூடாது’ என்று கூறி அந்த பெண் சர்ச்சை செய்கிறார். இதனால் இந்த பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் கடுமையாக நடக்கிறது. விமான பணிப்பெண்கள் இரண்டு பேர் வந்து இந்த சச்சரவை பேசி தீர்த்து வைக்கிறார்கள்’. இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இந்த சம்பவம் உண்மையில் நடந்தது என்று பரப்புகிறார்கள்.




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘FH Aviation Institute’ என்ற விமான நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அந்த நிறுவனத்தின் ‘Youtube’ பக்கத்திலும் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் எவ்வாறு பல்வேறு சூழல்களை கையாள வேண்டும் என்று பயிற்சியளிப்பதற்காக சித்தரித்து உருவாக்கப்பட்ட வீடியோ இது. அதாவது இது உண்மை சம்பவம் அல்ல. விமான பணிப்பெண்களுக்கு பயிற்சியளிப்பதற்காக சித்தரிக்கப்பட்ட வீடியோ (Scripted Video) இது. 



இதற்கு முன்பும் ‘FH Aviation Institute’ நிறுவன வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோக்களை உண்மை என்று பரப்பியதை ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம். இதுபோன்ற பல சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை (Scripted Videos) இந்த நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ உண்மை சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதல்ல, சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வருகிறது.


முடிவு:


விமான பயிற்சி நிறுவனம் பயிற்சி வகுப்புகளுக்காக உருவாக்கிய சித்தரிக்கப்பட்ட வீடியோவை (Scripted Video) உண்மை சம்பவம் என்று நம்பி தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க