யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. இதனை பதிவிட்ட பேஸ்புக் பக்கத்தில் இப்படி பல வீடியோக்கள் உள்ளன.
பரவிய செய்தி
இதுதான் சனாதன ஆட்சி. சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன், "வட இந்தியாவை பார்த்து நாடு பெருமை கொள்கிறது" - யாரோ சொன்னது

விரிவான விளக்கம்
வட இந்தியாவில் சொந்த தங்கையை ஆண் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் 9வது வினாடியில் disclaimer ஒன்று காண்பிக்கப்படுகிறது. அதில், ‘இவ்வீடியோ முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நேக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. இனம், நிறம், மதம், இனக்குழு அடையாளம் மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை அவமரியாதை அல்லது அவதூறு செய்யும் நோக்கில் எடுக்கப்படவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அவ்வீடியோ குறித்து தேடியதில், கடந்த 1ம் தேதி ‘Kanhiyakashyap02’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. அதிலும் இதே disclaimer இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தான் பிராங்க் வீடியோ எடுப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்பக்கத்தில் இதேபோன்று திட்டமிட்டு எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் இருந்ததையும் காண நேர்ந்தது. இந்த வீடியோவில் உள்ள பெண் பல வீடியோக்களில் உள்ளார். இப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட பல வீடியோக்களை உண்மை எனத் தவறாக பரப்பப்படுகிறது. அவை குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்கள் பொது இடத்தில் அத்துமீறல் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
முடிவு:
வட இந்தியாவில் தங்கையை அண்ணன் திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்படும் வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்டது. அது உண்மையான நிகழ்வு கிடையாது.