YouTurn

போருக்கு தயாராகும் ஈரான் ராணுவ வீரர்கள் என்று பரவும் சௌதி அரேபியா வீடியோ!

போருக்கு தயாராகும் ஈரான் ராணுவ வீரர்கள் என்று பரவும் சௌதி அரேபியா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ, ஈரானில் எடுக்கப்பட்டதல்ல. சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், அங்கு புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்த அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

ஈரானின் 800,000+ வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

ஈரானின் மேம்பட்ட ரஷ்ய - சீன தயாரிப்புக்களான ஆயுதங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள்,

இஸ்*ரே*லின் - டெல் அவிவ், டியாகோ கார்சியா, ஜோர்டான் மற்றும் பிற அமெரிக்க தளங்களை தாக்க வல்லமை கொண்டது.

 அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானிய ஐஆர்ஜிசி தனது இராணுவத்தில் மேலதிகமாக 100,000 துருப்புக்களைச் சேர்த்துள்ளது.

image.png

Instagram Link / Archived Link

விரிவான விளக்கம்

அமெரிக்கா ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ள களத்தில் தயாராக உள்ள 8 லட்சம் ஈரானிய ராணுவ வீரர்கள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ஐக்கிய அரபு ஊடகமான AlHadath என்ற ஊடகத்தில், ஜூன் 01, 2025 அன்று பரவி வரும் வீடியோவுடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், அங்கு புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்த அணிவகுப்பு பயிற்சி நடத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, Ederlyn LM என்ற பேஸ்புக் பக்கத்தில் ஜூன் 18, 2025 அன்று பரவி வரும் சவுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. 


அதே போல் Gulf 24 என்ற ஊடகத்திலும், 18 ஜனவரி 2026 அன்று இதே வீடியோ வெளியாகியிருந்தது. அதிலும் சவுதி அரேபியாவில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு என்று குறிப்பிட்டுருந்தது. 


முடிவு: 

எனவே, பரவி வரும் வீடியோ ஈரானில் எடுக்கப்பட்டதல்ல. சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், அங்கு புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்த அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க