YouTurn

இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி? பரவும் வீடியோ… உண்மை என்ன?

இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி? பரவும் வீடியோ… உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் பற்றி அந்தந்த நாட்டு மக்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதைப் பற்றியும் இது பற்றிய தனது குழப்பத்தையுமே அவர் பேசியுள்ளார்.

பரவிய செய்தி

இந்திய ரானுவம் பாக்கிஸ்தான் காரனுகளுக்கு தீவிரவாதிகளாம். 


image.png


X link

விரிவான விளக்கம்

மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இது வரும் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


https://x.com/i/web/status/1850077075300044910


இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இந்திய இராணுவ வீரர்களைப்பற்றிப் பேசியதாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் சாய் பல்லவி, இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான்காரர்களுக்குத் தீவிரவாதிகள் எனச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உண்மை என்ன?


பரவக்கூடிய வீடியோவில், ‘Great andhra’ என்ற லோகோ இருப்பதைக் காணமுடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில், 2022, ஜூன் 12ம் தேதி சாய் பல்லவியின் நேர்காணல் அந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


அதன் தலைப்பிலேயே ‘Virata Parvam’ என்ற திரைப்படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சாய் பல்லவி நக்சல் அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருந்தார். இது தொடர்பான நேர்காணல்தான் இந்த வீடியோ. 



அந்த முழு வீடியோவின் 7 நிமிடம் 54 வினாடியில் பரவக்கூடிய பகுதி இடம்பெற்றுள்ளது. தெலுங்கு மொழி அறிந்த ஒருவரின் உதவியுடன் அந்நேர்காணலில் சாய் பல்லவி பேசியதை அறியமுடிந்தது. "நக்சலாக சீருடை மற்றும் துப்பாக்கிக் கொண்டு நடித்துள்ளீர்கள், அவர்கள் மீதி அனுதாபம் உள்ளதா?" என நெறியாளர் VSN மூர்த்தி கேள்வி கேட்கிறார். 


"இது சித்தாந்தம் பற்றியது. ஒருவர் ஒரு சித்தாந்தத்தை வைத்திருந்தாலும், வன்முறை தீர்வல்ல" எனப் பதில் அளித்துள்ளார். மேலும், "வன்முறை மூலம் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியுமென நான் நம்பவில்லை. அதே நேரத்தில் நம் பிரச்சனையை அவர்களிடம் எப்படி வெளிப்படுத்துவது? சட்ட வழிமுறைகள் இருக்கும் போது எது சரி? எது தவறு? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்" எனக் கூறுகிறார். 


தொடர்ந்து பேசுகையில், "பாகிஸ்தான் மக்கள் நமது இராணுவத்தினரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார்கள். இங்கு நம்மைப் பொறுத்த அளவில் அவர்களின் இராணுவம் பயங்கரவாதிகள். இப்படி கண்ணோட்டம் மாறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எனக்கு வன்முறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை" எனக் கூறியுள்ளார். 


நேர்காணலில் எந்த ஒரு இடத்திலும் இந்திய இராணுவத்தைப் பயங்கரவாதிகள் என்று அவர் கூறவில்லை. ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் மற்றொருவருக்குச் சுதந்திர போராளியாகத் தெரிவார் என்கிற மாறுபட்ட கண்ணோட்டத்தையும் அது பற்றிய தனது குழப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 


அந்நேர்காணலில் சிறு பகுதியை மட்டும் திரித்து தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 


முடிவு: 


இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் மக்களுக்குப் பயங்கரவாதி என நடிகை சாய் பல்லவி கூறியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் பற்றி அந்தந்த நாட்டு மக்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதைப் பற்றியும் இது பற்றிய தனது குழப்பத்தையுமே அவர் பேசியுள்ளார். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.