YouTurn

தவெக மதுரை மாநாடு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேச மறுத்தாரா? உண்மை என்ன?

தவெக மதுரை மாநாடு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேச மறுத்தாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

என்னங்க இது மேடையில் அமர்த்தி கெளரவப்படுத்தியும் இப்படி டைமிங்கா அடிக்கிறார்?



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் ஆக. 21 அன்று நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர், விஜய் மதுரையில் நடத்திய மாநாடு குறித்து நிருபர்களிடம் பேச மறுத்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மதுரை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  “அவர் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்ல கூட்டம். என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. 



எனவே இதைத் தொடர்ந்து பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில், இது கடந்த ஆண்டு தவெக சார்பில் நடைபெற்ற முதல் மாநாட்டோடு தொடர்புடைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. 



இது தொடர்பாக, சமயம் மற்றும் Tamil.filmi beat உள்ளிட்ட ஊடகங்களில் கடந்த ஆண்டு செய்தி வெளியிடப்பட்டிருந்ததையும் தெளிவாகக் காண முடிகிறது. 



இதன்மூலம், கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டோடு தொடர்புடைய வீடியோவை தற்போது தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.