யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஐரிஷ் விமான நிறுவனமான ரியானேர் விமானம், புகையால் நிரம்புவதைக் காட்டும் பழைய வீடியோ இது. இதை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான விபத்தின் பதபதைக்க வைக்கும் காட்சி என்று 24 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விமானத்திற்கு உள்ளே புகையால் நிரம்பி இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
The last moment before the Air India crash 😢💔😭 pic.twitter.com/CvBQWsyOEe
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Kristi Yamaguccimane என்ற எக்ஸ் பக்கத்தில் ”Smoke fills the cabin of a Ryanair flight moments after takeoff (January 2020)” என்ற தலைப்பில் மார்ச் 17, 2023 அன்று பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதிலும் விமானம் முழுவதும் புகை மண்டலங்களால் சூழ்ந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.
Smoke fills the cabin of a Ryanair flight moments after takeoff (January 2020) pic.twitter.com/wYFIcVU8H2
இதையடுத்து ryanair flight smoke என்ற keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Independent ஊடக பக்கத்தில், ”Passengers scream on Ryanair flight to Stansted as cabin suddenly fills with smoke” என்ற தலைப்பில் ஜனவரி 23, 2020 அன்று செய்தி வெளியாகியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதில் போயிங் 737 - 800 விமானம் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கேபின் முழுவதும் புகையால் நிரம்பியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டு Otopeni விமானநிலையத்தில், விமானம் தரையிறக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் ”Panic on Ryanair flight after cabin suddenly fills with smoke” என்ற தலைப்பில் ஜனவரி 22, 2020 அன்று, Metro ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அதில் லண்டன் செல்லும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் புகை சூழ்ந்ததால் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது. மேலும் விமானம் 5000 அடி உயரத்திற்குப் பறந்த போது, கேபினில் புகை நிரம்பத் தொடங்கியதாகவும், இதனால் பயணிகள் பீதியடையத் தொடங்கியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், ரியானேர் விமானம், புகையால் நிரம்புவதைக் காட்டும் பழைய காணொளியை, தற்போது நடந்த அகமதாபாத் விமான விபத்தோடு தொடர்புப்படுத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
