YouTurn

இடும்பாவனம் கார்த்திக் மது போதையில் இருப்பதாகப் பரவும் பொய்!

இடும்பாவனம் கார்த்திக் மது போதையில் இருப்பதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோவில் திருவிழாவில் மதுபோதையில் இருப்பதாக நடிகர் ஸ்ரீகுமார் கணேஷின் படப்பிடிப்பு புகைப்படத்தை தவறாக பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

கோவில் திருவிழா ஒன்றில் நடக்க முடியாதபடி போதையில் தள்ளாடி கீழே விழுந்த நாய்டம்ளர் இடும்பாவனம் கார்த்திக் இவனுங்கதான் டாஸ்மாக்க பத்தி நாய் மாதிரி ஊரெல்லாம் குரைப்பானுங்க.

X link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோயில் திருவிழாவின்போது மது போதையில் தள்ளாடி கீழே விழுந்துள்ளார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், கடந்த 10ஆம் தேதி ‘ABP நாடு’ இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருப்பதைக் காணமுடிந்தது. அக்கட்டுரையில் பரவக்கூடிய புகைப்படம் உள்ளது.


ஸ்ரீகுமார் கணேஷ், சாந்தினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’வானத்தை போல’ என்ற நாடகம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரதில் நடிக்கும் ஸ்ரீகுமார் கணேஷை பொதுமக்கள் மிதித்துவிட்டுச் செல்வது போல் ஒரு காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. 



அக்காட்சியின் ஒத்திகை behind the scenes-ஆக வீடியோ எடுத்து, அதனை ஸ்ரீகுமார் கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பற்றி ABP நாடு வெளியிட்ட செய்தியில் பயன்படுத்தப்பட்ட thumbnail-ஐ எடுத்து இடும்பாவனம் கார்த்திக் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடி விழுந்ததாகப் பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

முடிவு: 

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோயில் திருவிழாவில் மதுபோதையில் தள்ளாடி விழுந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. வீடியோவில் இருப்பது நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ். இந்த புகைப்படம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க