YouTurn

தவெக தரப்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை கேட்டதாக பரவும் செய்தி!

தவெக தரப்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை கேட்டதாக பரவும் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தவெக தரப்பில் அனுமதி கேட்டது "லைட் ஹவுஸ் ரவுண்டானா". பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பேருந்து நிலைய ரவுண்டானாவை வழங்கியுள்ளனர் என்று கூறி மதிவாணன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

“கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்”

image.png

Youtube Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பலியாகினர். இதையடுத்து இரவோடு இரவாக உயிரிழந்த உடல்களும் அனைத்து பிரதே பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானிக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை வழங்கிவிட்டு, தவெக தரப்பில் அதே பகுதியில் அனுமதி கேட்டப்போது கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக மதிவாணன் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பு வருகின்றனர்.


உண்மை என்ன?

முதலில் பரவி வரும் இந்த செய்தி குறித்து ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது செப்டம்பர் 25 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோருதல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றை காணமுடிந்தது.


அதில் ”எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக கரூருக்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். லைட் ஹவுஸ் ரவுண்டானா இடத்தை 23.09.25 அன்று பொறியாளரை வைத்து அளவீடு செய்ததில் 1,20,000 சதுரடி காலியிடமாக உள்ளது. இதில் 60 ஆயிரம் நபர்கள் வரை நின்று பார்வையிட வாய்ப்பு உள்ளது. நாங்கள் இக்கூட்டத்திற்கு எதிர் பார்க்கப்படும் நபர்கள் 10,000 பேர்வரை ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.”


எனவே, தவெக கட்சிக்கு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.


முடிவு:

நம் தேடலில், தவெக தரப்பில் அனுமதி கேட்டது "லைட் ஹவுஸ் ரவுண்டானா". பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பேருந்து நிலைய ரவுண்டானாவை வழங்கியுள்ளனர் என்று கூறி மதிவாணன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க