YouTurn

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர் குறுகலான இடம் என்று குறிப்பிட்டது உழவர் சந்தை மற்றும் ரவுண்டானா பகுதிகளை தான்.

பரவிய செய்தி

So many truth hidden 

Took little time to come out but happy that its atleast coming out now with clear cut evidence 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தந்தி டிவி ஊடகத்தின் விவாத நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அரசியல் விமர்சகர் காமேஷ், வேலுசாமிபுரம், 500 காவலர்களைக் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுகலான இடம் என்று கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பேசியுள்ளார். 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிய, கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அளித்த பேட்டி கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தில் ”LIVE : Karur ADGP Press meet | TVK Vijay campaign Tragedy | Karur Stampede” என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 28 அன்று முழு பேட்டியும் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அவர், ”தவெகவினர் கொடுத்த மனுவில் லைட்ஹவுஸ் ரவுன்டானாவில் அனுமதி கேட்டனர். அது மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் அந்த இடம் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு உழவர் சந்தை மைதானத்திற்கு அனுமதி கேட்டனர். அதுவும் குறுகலான பகுதி. இதுபோன்ற கூட்டத்தை சமாளிப்பது கடினம். போலீசார் பரிந்துரையின் பேரில், தவெகவினர் மனு கொடுத்து, வேலுசாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்றே கூறியிருந்தார்.


இது குறித்து ETV Bharat Tamil ஊடகத்திலும் “தவெக கேட்ட இடத்தை காவல்துறை கொடுக்காதது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் ”செப்டம்பர் 23 அன்று தவெக சார்பில் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அந்த இடத்தின் ஒருபுறம் பெட்ரோல் பங்க் மற்றும் மறுபுறம் ஆற்றுப்பாலம் இருந்தது. இதனால், அந்த பகுதியில் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி வழங்கவில்லை. மறுநாளே, உழவர் சந்தை பகுதியில் அனுமதி கேட்கப்பட்டது. அந்த இடமும் குறுகலான இடம். பெருந்திரள் மக்களை அங்கு கூட்டுவது சாத்தியமில்லாததால், அந்த இடத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது” என்று அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில் கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , குறுகலான இடம் என்று குறிப்பிட்டது உழவர் சந்தை மற்றும் ரவுண்டானா பகுதிகளை தான். இதை வேலுசாமிபுரம், 500 காவலர்களைக் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுகலான இடம் என்று அவர் கூறியதாகக் கூறி சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க