YouTurn

ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் வதந்தி!

ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒன்றிய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியான செய்தி.

பரவிய செய்தி

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. 

Link: https://gvd.jjssf.xyz/15skiygmq/c535892ba59465a344f8d4412b?_t1765898988623&p=w 



விரிவான விளக்கம்

ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் 2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் ரூ.30,000 வழங்கவுள்ளது. எனவே உடனே கீழே உள்ள இணைப்பில் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு செய்தி ஒன்று வாட்சாப் ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன?


பரவி வரும் செய்திகள் குறித்து ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ Press Information Bureau (PIB) பக்கத்தில் ஆய்வு செய்ததில் அது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது. 



இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தால் செய்தி ஊடகங்களில், இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் ஊடகங்களிலும் இது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

 

மேலும் வாட்சாப் ஊடகத்தில் இது குறித்து பரவி வரும் இணையதளப் பக்கத்தை ஆய்வு செய்ததில் அதுவும் செயல்பாட்டில் இல்லை. 



இதற்கு முன்பும் இதே போன்று பல செய்திகள், நிதியுதவி மற்றும் பரிசுத்திட்டம் என்று குறிப்பிட்டு போலியாக பரவின. அப்போதே இது குறித்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். 


மேலும் படிக்க: ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி ! 


மேலும் படிக்க: காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?


மேலும் படிக்க: தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ?


மேலும் படிக்க: புதிய சைபர்கிரைம் மோசடி: உங்கள் செல்போன் அழைப்புகளை யாருக்கும் பகிர வேண்டாம்..!


முடிவு: 


நம் தேடலில், ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க