YouTurn

'தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வட இந்தியப் பயணி' எனப் பரவும் வதந்தி!

'தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வட இந்தியப் பயணி' எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“சோனி ஜி” என்ற அந்த பயணி தனது யூடியூப் பக்கத்தில், ஆந்திராவில் ஏற்பட்ட மோசமான அனுபவம் என்று குறிப்பிட்டு ஜனவரி 24 அன்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… உதவுங்கள்… உதவுங்கள். தமிழ்நாட்டில், வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்து யாத்திரிகர் மீது நடந்த கொள்ளைச் சம்பவம்—கேமராவில் பதிவானது. அவர் தொடர்ந்து உதவி கேட்டு அலறினார்; ஆனால் யாரும் உதவ வரவில்லை.


இது காங்கிரஸ் ஆளும் புதிய தமிழ்நாடா? இதே போன்ற சம்பவம் வட இந்தியாவில் ஒரு தமிழருக்கு நடந்திருந்தால் என்ன ஆகும்?


சோனி ஜி கன்னியாகுமரியில் இருந்து இலங்கை வரை இந்து யாத்திரையாகப் பயணம் செய்து வரும் ஒரு blogger. அவர் உதவி கேட்ட அதே biker தான் அவரை கொள்ளையடித்துள்ளார். வீடியோ க்ரெடிட்: Soni Travelers.



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில், வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்து யாத்திரிகர் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் உள்ள நபர்கள், ஒரு இளைஞரை தாக்குவதையும், அந்த இளைஞர் உதவி வேண்டும் என்று கத்துவதையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. 



மேலும் சிலர் இதே வீடியோவைக் குறிப்பிட்டு, “ஹிந்தி பேச தெரியாத காரணத்தினால் வட இந்தியாவில், தெலுங்கு பேசும் இளைஞர் தாக்கப்பட்டார்” என்றும் கூறி சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


SoniTraveling” என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி ஜனவரி 24, 2026 அன்று “தென்னிந்தியாவிற்கு வராதீர்கள் | ஆந்திராவில் ஏற்பட்ட மோசமான அனுபவம் | தென்னிந்திய தாக்குதல்“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



வீடியோவின் மூலம், “சோனி ஜி” என்ற பயணி கடந்த மாதம் ஆந்திராவிற்கு சென்ற போது நடைபெற்ற சம்பவம் இது என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 



இந்நிலையில் வடஇந்தியப் பயணி ஒருவர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். இதே போன்று இந்தி தெரியாத காரணத்தினால் தெலுங்கு பேசும் இளைஞர் தாக்கப்பட்டார் என்று கூறி பரவி வரும் செய்திகளும் தவறானவையே.


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வட இந்தியப் பயணி எனப் பரவும் வீடியோ, ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க