YouTurn

திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2025 அக்டோபர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தின் ‘ரத்லம்’ நகரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்திய போது எடுக்கப்பட்ட வீடியோ.

பரவிய செய்தி

திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம். 


image.png


X Link / Archive Link

விரிவான விளக்கம்

ஒரு நகரத்தின் பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான நபர்கள் வெள்ளை சட்டையும் காக்கி பேன்டும் அணிந்து இரவு நேரத்தில் ஊர்வலம் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘நீதிமன்ற அனுமதி கிடைத்ததை அடுத்து திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர். எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் சென்றதாக’ பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன? 


திருவண்ணாமலையில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்திய குறித்து செய்திகளில் தேடினோம். 2024 அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் பிற டெல்டா மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது குறித்த செய்திகளை தான் காணமுடிகிறது. குறிப்பாக திருவண்ணாமலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் ஆர். எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்தியிருப்பதை அறியமுடிகிறது. 



இதிலிருந்து சமீபத்தில் தமிழ்நாட்டில் எங்கேயும் ஆர். எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்தவில்லை என்பது தெரிய வருகிறது. 


இதனடிப்படையில், திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தியதாக பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களை கொண்டு தேடியதில், ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ‘Organizer Weekly’-ன் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த வீடியோவைக் காண முடிந்தது. அதில் இந்த ஊர்வலம் மத்திய பிரதேச மாநிலத்தின் ‘ரத்லம்’ நகரில் 2025 அக்டோபர் மாதம் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


‘ரத்லம்’ நகரில் நடந்த இந்த ஊர்வலத்தில்  20,000 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பங்கேற்றதாக ‘Dainik Bhaskar’ இந்தி செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளதையும் காணமுடிகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த ஊர்வலம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லம் நகரில் நடந்தது என்பது உறுதியாகிறது.


முடிவு: 


மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை திருவண்ணாமலையில் நடந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க