YouTurn

திமுக ஆட்சியில் 200 யூனிட்டுகளுக்கு 480 ரூ மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பரவும் வதந்தி!

திமுக ஆட்சியில் 200 யூனிட்டுகளுக்கு 480 ரூ மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல் 100 யூனிட்களுக்கு மின்கட்டணம் இலவசமாக உள்ள நிலையில், அதற்கும் சேர்த்து கணக்கீடு செய்து தற்போது 200 யூனிட்டுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது “திமுக ஆட்சியில் 200 யூனிட்டுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

திமுக ஆட்சியில் 200 யூனிட்டுகளுக்கான மின்கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 200 யூனிட்டுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 200 யூனிட்டுகளுக்கு எவ்வளவு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து முதலில் ஆய்வு செய்தோம். 


புதியதலைமுறை ஊடகப் பக்கத்தில் கடந்த 2021 மே 22 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில், “100 யூனிட்க்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணம், 210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணம், 390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணம், 500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது“ என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறும் தகவல் உண்மையே என்பதை அறிய முடிந்தது. 



அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது வசூலிக்கப்படும் மின்கட்டணம் குறித்து,  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டிருந்த கட்டண விவரம் குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, 0 -  200 யூனிட்களுக்கு, 235 ரூபாய் (ஒரு யூனிட்டுக்கு ரூ.2.35) வசூலிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாடு அரசின் TNPDCL இணையதளத்தில் உள்ள “Bill Calculator” உதவியுடன் உறுதிபடுத்தினோம். 



முதல் 100 யூனிட்களுக்கு மின்கட்டணம் இலவசம். அதன்படி 200 யூனிட்டுக்கு (101-200 யூனிட்), தற்போது 235 ரூபாய் (ஒரு யூனிட்டுக்கு ரூ.2.35) மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் 100 யூனிட்களுக்கு மின்கட்டணம் இலவசமாக உள்ள நிலையில், அதற்கும் சேர்த்து கணக்கீடு செய்து,  திமுக ஆட்சியில் 200 யூனிட்டுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில்,  திமுக ஆட்சியில் 200 யூனிட்டுகளுக்கு 480 ரூபாய் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மின்கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க