யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கடந்த 2020 ஆம் ஆண்டு ‘Adelaide Oval Test match’ கிரிக்கெட் போட்டியின் போது “பூம் பூம் பூம்ரா” என்று உற்சாகமாக கோஷம் எழுப்பிய இந்த குழந்தை வேறு யாரும் அல்ல. கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி தான்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.பரவி வரும் வீடியோவில் இருப்பது சிறுவயது வைபவ் சூர்யவன்சி அல்ல. அந்த குழந்தையின் பெயர் ஜியான் தேசாய் (Jiyaan Desai).
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த 2020 ஆம் ஆண்டு ‘Adelaide Oval Test match’ கிரிக்கெட் போட்டியின் போது “பூம் பூம் பூம்ரா” என்று உற்சாகமாக கோஷம் எழுப்பிய இந்த குழந்தை வேறு யாரும் அல்ல. கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி தான் என்று வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அடேய் பும்ரா பேரு கூட வாய்ல வரல 😂😂
ஆனா இப்போ🔥🔥#Vaibhavsuryavanshi pic.twitter.com/jxIEzDqpcX
உண்மை என்ன?
இந்த சிறுவன் குறித்து கூகுள் ரிவர்ஸ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Latestly ஊடகத்தில், ஏப்ரல் 20, 2026 அன்று ”Boom Boom Bumrah Kid Is Back” என்று குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) ஜஸ்பிரித் பும்ராவின் பெயரை அன்பாக முழங்கிய அந்தச் சிறு ரசிகன் வைரலானான். இப்போது, அந்த முன்னணி இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளான் என்று குறிப்பிட்டுருந்தது. அதில் எங்கும் அவர் தான் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி என்று குறிப்பிடவில்லை.

இது குறித்து மேலும் தேடிய போது, SBS Gujarati ஊடகத்தில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ஜியான்(Jiyaan) தனது தந்தை ஹர்ஷ் தேசாயுடன்(Harsh Desai) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில் பல இடங்களில் அந்த சிறுவனை ஜியான் தேசாய் என்று குறிப்பிட்டு இருந்ததையும் பார்க்கமுடிந்தது.

தற்போது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சிக்கு 15 வயதாகிறது. ஆனால் பரவி வரும் வீடியோவில் உள்ள சிறுவனை, பத்திரிக்கையாளர் சுபயன் சக்ரவர்த்தி 2024ஆம் ஆண்டு வீடியோவாக பதிவு செய்திருந்தார். அதில் அந்த சிறுவனுக்கு 15 வயதாகவில்லை என்பதை தெளிவாக பார்க்கமுடிந்தது.
Found the Boom Boom Bumrah kid! 4 years apart. #BGT @RevSportzGlobal pic.twitter.com/8z4XzfARCn
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோவில் இருப்பது சிறுவயது வைபவ் சூர்யவன்சி அல்ல. அந்த குழந்தையின் பெயர் ஜியான் தேசாய் (Jiyaan Desai). இதை வைபவ் சூர்யவன்சி என்று பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
