YouTurn

கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !

கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன்  வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கடலுக்கு அடியில் இன்னும் உயிர் ததும்ப காட்ஷி தரும் துவாரகை... யுகங்கள் மாறினாலும் துளியும் மாறாத நம் ஸனாதனப் பொக்கிஷங்கள்...

Facebook link 

விரிவான விளக்கம்

டலுக்கு அடியில் இன்னும் அழியாமல் காட்சி தரும் துவாரகையின் பகுதிகள் எனக் கூறி 25 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் கடலில் சிதலமடைந்த நிலையில் இருக்கும் மண்டபத்திற்குள் கிருஷ்ணர், ராதை சிலைகள் இருப்பது போன்று கான்பிக்கப்பட்டு உள்ளது.



Twitter link | Archive link

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2023 மார்ச் 31ம் தேதி ‘Lost Temples’ எனும் முகநூல் பக்கத்தில் “Dwarka: India’s submerged ancient city " எனும் தலைப்பில் இதே வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில், இந்த வீடியோவில் உள்ள துவாரகை நகரானது 3D மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் வீடியோ கிரெடிட் ‘Artz by Ram’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

மேற்கொண்டு, artz_by_ram எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுகையில், 2023 மார்ச் 20ம் தேதி இவ்வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது. அதிலும், 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு எனக் கூறப்பட்டு உள்ளது.



 










View this post on Instagram























 

A post shared by Sri Ram (@artz_by_ram)






இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதேபோல் அனிமேஷன் வீடியோக்கள் பல பதிவிடப்பட்டு உள்ளன. இதையே உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.



மேலும் படிக்க : குஜராத் கடலுக்கடியில் துவாரகை மாளிகையை நாசா கண்டறிந்ததாக வதந்தி !

மேலும் படிக்க : கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா பகுதியின் புகைப்படங்களா ?| உண்மை என்ன ?

இதற்கு முன்பாகவும், கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரம் எனக் கூறி இணையத்தில் கிடைக்கும் அனிமேஷன் படங்கள் மற்றும் வீடியோக்களை உண்மைப் போல் பரப்பி இருந்தனர். அதுகுறித்தும், நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் வீடியோ அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க