YouTurn

மோடி ஆட்சியில் மதக் கலவரங்களே நடக்கவில்லையாம்: ரங்கராஜ் பாண்டே-ன் உருட்டு!

மோடி ஆட்சியில் மதக் கலவரங்களே நடக்கவில்லையாம்: ரங்கராஜ் பாண்டே-ன் உருட்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

பரவிய செய்தி

2014-க்கு முன்னர் இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடந்தது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை - ரங்கராஜ் பாண்டே

Link 

image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று மோடி பிறந்தநாள் விழாவில் பேசிய ரங்கராஜ் பாண்டே, “2014-க்கு முன்னர் வரை இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடந்தது. ஆனால், 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை” என்று கூறினார். 



உண்மை என்ன?


கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து இந்தியாவில் ஏதேனும் கலவரங்கள் நடந்துள்ளதாக என்று இணையத்தில் தேடினோம். ’Hindustan Times’ செய்தித்தளத்தில் 2022 மார்ச் மாதம் வெளியான ஒரு செய்தியில், ‘2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே  இந்தியாவில் 3,399 வகுப்புவாத அல்லது மதவாத கலவரங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) அளித்துள்ள அறிக்கைகளின் படி, 2020ஆம் ஆண்டு 857 கலவரங்களும், 2019ஆம் ஆண்டு 438 கலவரங்களும்,  2018ஆம் ஆண்டில் 512 கவவரங்களும்,  2017ஆம் ஆண்டு 723 கவவரங்களும், 2016ஆம் ஆண்டு 869 கலவரங்களும் நடந்துள்ளதாக  இணை அமைச்சர் நித்தியானந் ராய் குறிப்பிட்டார். 


மேலும் கூடுதலாக 2020ஆம் ஆண்டில் 51,606 கலவரங்களும், 2019ல் 45,985 கலவரங்களும், 2018ல் 57,828 கலவரங்களும், 2017ல் 58,880 கலவரங்களும், 2016ல் 61,974 கலவரங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுவின் பெயரில் நடக்கும் கும்பல் கொலைகள் பற்றிய தனியான தரவுகள் NCRB-ல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 


image.png


இதேபோல் 2022 ஜூன் மாதம் ஜக்கி வாசுதேவ் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது, 'கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மதக்கலவரங்கள் நிகழ்ந்ததாக நான் கேள்விபடவே இல்லை’ என்று கூறினார். அப்போது மேலே இணை அமைச்சர் நித்தியானந் ராய் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில்  ஜக்கி வாசுதேவ் கூறுவது பொய்யான தகவல் என்று ’You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தியிருந்தோம். 


image.png


மேலும் தேடியதில் ‘THE NEW INDIAN EXPRESS’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, ’Centre for Study of Society and Secularism (CSSS)’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறைகள் 84% அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, மோடி தலைமையில் பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு பல வகுப்புவாத கலவரங்கள் நடைபெற்றிருப்பதை தெளிவாக அறிகிறோம். 


முடிவு:


மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை என்று ரங்கராஜ் பாண்டே அப்பட்டமாக பொய்யான தகவலை மேடையில் பேசிகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க