YouTurn

'ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது' என ரஜினி கூறியதாகப் பரவும் தவறான செய்தி !

'ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது' என ரஜினி கூறியதாகப் பரவும் தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று குஜராத் ஜாம்நகரில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி - நியூஸ் 18 தமிழ்நாடு


X Link | Archive Link

விரிவான விளக்கம்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Pre Wedding) மார்ச் 1 முதல் 3 -ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிட்டு 'நியூஸ் 18 தமிழ்நாடு' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நடிகர் ரஜினி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை அறிய முடிகிறது.

நியூஸ் 18 தமிழ்நாடு இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "அம்பானிகள், நம் இந்தியாவின் பெருமை. முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி, திருமணத்திற்கு முந்தைய நிகழ்வை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த கைலாசத்தையும், வைகுண்டத்தையும் இந்த உலகிற்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். 

மேலும் வந்தாரா வனம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிரூபர் ஒருவர் ரஜினியிடம் கேட்டதற்கு, "மிக அருமை. இது உண்மையில் இந்தியாவிற்கு பெருமையாக/கௌரவமாக இருக்கப் போகிறது. நமது வேத பாரம்பரியம், நமது கலாச்சாரம் மற்றும் நம் நாடு மற்றும் மக்கள் மீதான அன்பின் காரணமாகவே இன்று அம்பானி இவ்வாறு இருக்கிறார். மேலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார். 



இதே போன்று ANI ரஜினி பேசியது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும் "நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார்" என்று ரஜினி எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்த முடிந்தது. 



எனவே வந்தாரா வனம் உண்மையில் இந்தியாவிற்கு பெருமையாக/கௌரவமாக இருக்கப் போகிறது என்று ரஜினி கூறியதை, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று ரஜினி கூறியதாகக் கூறி 'நியூஸ் 18 தமிழ்நாடு' ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க: நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமிக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

மேலும் படிக்க: அசைவ உணவு சாப்பிடுபவர் ஒழுக்கம் இல்லாதவர் என ரஜினிகாந்த் பேசினாரா ?

முடிவு:

நம் தேடலில், "நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மகனின் திருமண நிகழ்ச்சியை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருக்கிறார்" என்று ரஜினி கூறியதாகக் கூறி 'நியூஸ் 18 தமிழ்நாடு' ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க