யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
உத்தரகாண்டிலும் ஜிகாதி பயங்கரவாதம் ஆரம்பித்து விட்டது. ஹிந்துக்களே ஓடுங்கள். எங்கே ஓடுவீர்கள் இது டேராடூன், லோஹியா நகர் வீடியோ. இந்த ஜிகாதிகள் இந்துக்களை விரட்டி கொன்று, இந்துக்களின் தலையை கிழித்து சாகடிக்கிறார்கள். டேராடூன் இந்துக்கள் நமக்கு ஒன்றுமகாது என உறக்கத்தில் உறங்குகிறார்கள்.

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள லோஹியா நகரில் முஸ்லிம்கள் இந்துக்களை தாக்குவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், கும்பல் ஒன்று கற்களாலும், கம்புகளாலும், மக்களை தாக்குவதைவும், அதற்கு பயந்து அவர்கள் ஓடுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
"India Tv" ஏப்ரல் 08 அன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது என்பதை பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் கிடைத்தது. மேலும் அதில் "வீடியோ: முதல்வர் பஜன் லால் பகுதியில் குண்டர் கும்பல், நிலத்தை கைப்பற்ற வந்த 50 மர்மநபர்கள், குடும்பத்தினரை தடி மற்றும் கற்களால் தாக்கினர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தியில் காணப்படும் புகைப்படங்கள் பரவி வரும் வீடியோவோடு அப்படியே பொருந்துகின்றன.
அதில் "ராஜஸ்தான் முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதியான சங்கனேரில், ஒரு குடும்பத்தை கம்புகள் மற்றும் கற்களால் கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மல்புரா கேட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சங்கனேர் ரயில் நிலையம் அருகே உள்ள தாதா குருதேவ் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில், சுபாஷ் சந்த் மத்ரேனா மற்றும் நந்த் கிஷோர் ஆகிய இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் தலைமறைவாகியுள்ளனர். குடும்பத்தினர் காவல்துறையை உதவிக்கு அழைத்ததை அடுத்து நிலைமை சீரானது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று "Amarujala" என்ற ஊடகத்திலும் ஏப்ரல் 08 அன்று "ராஜஸ்தான்: முதல்வர் பஜன் லால் சட்டசபையில் பட்டப்பகலில் குண்டர் கும்பல், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது!" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், "ஜெய்ப்பூரின் மல்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள தாதாபரி ஜெயின் கோயிலில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது, வாகனங்களில் வந்த டஜன் கணக்கான ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பெரும் பீதியை உருவாக்கினர். கைகளில் தடிகள், கம்பிகள் மற்றும் கற்களை ஏந்தியவாறு டிராக்டரில் சென்றவர்கள் தனது வீட்டின் பிரதான கதவை வலுக்கட்டாயமாக உடைத்து உள்ளே நுழைந்ததை பார்த்ததாக பாதிக்கப்பட்ட சங்கர்லால் சுய்வால் தெரிவித்தார். இந்த சதித்திட்டத்திற்கு காரணம் முன்விரோதம் என்றும், இதற்கு முன்பும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்விரோதம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற சம்பவத்தை, உத்தரகாண்டில் முஸ்லிம்கள் இந்துக்களை தாக்குவதாகக் கூறி சிலர் வகுப்புவாத்தைத் தூண்டும் வகையில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: ஓடும் இரயிலின் முன் கேஸ் சிலிண்டரை வீசிய ஜிகாதிகள் எனத் தவறாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், உத்தரகாண்டில் முஸ்லிம்கள் இந்துக்களை தாக்கி பயங்கரவாத செயலில் ஈடுபடுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

எல்லாவற்றிகும் முடிவு வரும் இம்முறை ஆட்சி நமதே இந்துக்கள் காக்கப்படுவார்கள் https://t.co/Ek40trsCJu
— அங்குசம் (@saiko58791481) May 30, 2024