யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒரே நபர் முதலில் ரயில்வே போர்டராகவும் பின்னர் மாணவர் தலைவராகவும் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதாப் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிகப்பு நிற உடை அணிந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும், மற்றோரு புகைப்படத்தில் ராகுல் காந்தி மாணவர்களோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு மாணவனாக அமர்ந்திருக்கும் அதே நபர் தான் சுமை தூக்கும் தொழிலாளியாக அமர்ந்திருக்கிறார் என்ற தகவலோடு புகைபடத்தைப் பதிவிட்டு சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
அது எப்படி திமிங்கலம் அவனே போர்டர் ஆகவும் கல்லூரி மாணவனா போட்டோ சூட் க்கு போஸ் கொடுக்கிறான்? pic.twitter.com/q5SdP3P6gR
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியபோது, இரண்டு புகைப்படத்தில் இருப்பவர்களும் வேறு வேறு நபர்கள் என்பதை அறிய முடிந்தது.
முதல் புகைப்படம் குறித்து தேடியதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மார்ச் 1 ஆம் தேதி ராகுல் காந்தி புதுதில்லியில் ரயில்வே போர்ட்டர்கள் குழுவைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதைக் கண்டறிந்தோம்.
नेता विपक्ष श्री @RahulGandhi ने नई दिल्ली रेलवे स्टेशन पर कुली भाइयों से मुलाकात की।
राहुल गांधी जी ने कुली भाइयों का पूरे देश की ओर से धन्यवाद किया, क्योंकि हादसे के समय कुली भाइयों ने इंसानियत दिखाते हुए जिस तरह लोगों की मदद की, वह बेहद सराहनीय था।
उम्मीद है कि सरकार ऐसे… pic.twitter.com/F1V7wZjtUy
சமீபத்தில் நடந்த ரயில்வே விபத்தின் போது, மனிதநேயத்துடன் செயல்பட்டு பலருக்கு உதவிய போர்டர் சகோதரர்களுக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தது.
முதல் புகைப்படத்தில் இருப்பவர் ராஜஸ்தானை சேர்ந்த கேதார் லால் மீனா. இவர் சுமை தூக்கும் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
அடுத்ததாக, ராகுல் காந்தி டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்களைச் சந்திக்கும் புகைப்படம் குறித்தது தேடியதில், மே 27 2025 அன்று ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவாகி இருந்ததை கவனித்தோம்.
‘Not Found Suitable’ अब नया मनुवाद है।
SC/ST/OBC के योग्य उम्मीदवारों को जानबूझकर ‘अयोग्य’ ठहराया जा रहा है - ताकि वे शिक्षा और नेतृत्व से दूर रहें।
बाबासाहेब ने कहा था: शिक्षा बराबरी के लिए सबसे बड़ा हथियार है। लेकिन मोदी सरकार उस हथियार को कुंद करने में जुटी है।
दिल्ली… pic.twitter.com/JfPe1xxQdm
ராகுல் காந்தி மே 22 அன்று டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்திற்குச் சென்று மாணவர் சங்கத்தினருடன் கலந்துரையாடி, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்து விவாதித்ததாதகவும், அதில் பாபாசாகேப் அம்பேத்கர் சொன்ன "கல்வியே சமத்துவத்தின் மிகப் பெரிய ஆயுதம்" என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
இது உரிமை, மரியாதை, பிரதிநிதித்துவம் ஆகியவற்றிற்கான போராட்டம். "நான் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுடன் (DUSU) பேசியபோது, ஒரு விஷயம் தெளிவாகியது, இப்போது நாமெல்லாம் சேர்ந்து BJP/RSS இன் ஒவ்வொரு இடஒதுக்கீடு எதிர்ப்பு நடவடிக்கையையும் அரசியலமைப்பின் பலத்துடன் எதிர்க்கப் போகிறோம்", என அதில் குறிப்பிட்டிருந்தார்.
வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் லோகேஷ் சவுத்ரி.
இதனையடுத்து, லோகேஷ் சவுத்ரியின் புகைப்படத்துடன் கேதார் லால் மீனா அவரது புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்ததில், இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில் பரவிவரும் புகைப்படத்தில் இருக்கும் நபர்கள் வெவேறு நபர்கள் என்பதை அறிய முடிந்தது.
