YouTurn

ராகுல் காந்தி தோசை பற்றிப் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

ராகுல் காந்தி தோசை பற்றிப் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி போன்ற கோமாளிகளை அழைத்து வரும்போது, நீங்கள் கேட்பது இதுதான்.


X link

விரிவான விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, கோவை செட்டிபாளையத்தில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார். 



அந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியது குறித்து பாஜக ஆதரவாளர் கிருஷ்ண குமார் வீடியோ ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் தோசை குறித்துப் பேசியது போல் உள்ளது. 

அந்த வீடியோவில் ‘நீங்கள் தோசை பிடிக்கும் என்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து தமிழ்நாட்டு மக்களிடம் தோசை பிடிக்கும் எனச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுக்குத் தோசை பிடிக்கும் எனச் சொல்கிறீர்கள்’ என ராகுல் பேசியது போல் உள்ளது.

உண்மை என்ன? 

ராகுல் காந்தி தோசை குறித்துப் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதுபோல் இருந்ததையடுத்து  இந்நிகழ்ச்சியின் முழு வீடியோவை தேடினோம். 

இதன் முழு வீடியோ ’M.K. STALIN’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் 35வது நிமிடத்திற்கு மேல் ராகுல் காந்தி பேசுகிறார். அவர் பேசுவதை திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

ராகுல் காந்தி பேசியது, ’உங்களுக்கென்று வரலாறு உள்ளது. உங்களது வரலாறு எனது கண்முன்னால் ஓடிக் கொண்டுள்ளது. பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் அவர்கள் எல்லாம் தங்களின் அறிவாற்றல் மூலம் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்கள். அவர்கள்தான் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகமே பேசியது. காரணம் அவர்கள் பேசியது உள்ளத்தில் இருந்து. தற்போது தமிழ்நாட்டில் இருந்து மோடி, அதானி, ஆர்.எஸ்.எஸ். பற்றி கேள்வி கேட்கிறார்கள். முதல் கேள்வி எதற்காக எங்கள் வரலாற்றை, மொழியை, பாரம்பரியத்தை அவதூறாகப் பேசுகிறீர்கள்’ என்று கூறுகிறார். 



அதனைத் தொடர்ந்து, ’நீங்கள் இங்கு வந்து எனக்குத் தோசை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் டெல்லிக்குத் திரும்பிய பின்னர் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி எனப் பேசுகிறீர்கள்ஏன் ஒரே மொழி? ஏன் தமிழ், பெங்காலி, கன்னடம் என மற்ற மொழிகளுக்காக நீங்கள் பேசக் கூடாது. இங்கு வந்து தோசை பிடிக்கும் என்கிறீர்கள். ஆனால், இங்கிருந்து போனதும் இந்த கலாச்சாரத்தையும் மொழியையும் அவதூறாகப் பேசுகிறீர்கள். நீங்கள் தோசை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை. GST கொண்டுவந்து மக்களை வாட்டி வதைக்கிறீர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக மோசமான நிலைமைகளை நாடு சந்தித்தது. மோடி ஜீ உங்களுக்குத் தோசை மட்டுமல்ல வடை கூட பிடிக்கலாம். ஆனால், அதுவல்ல இப்போது பிரச்சனை. தமிழ் மொழி பிடிக்குமா என்பதுதான் பிரச்சனை’ என்று கூறியுள்ளார். 

மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு விஷயத்தைப் பேசுகிறார். பிறகு டெல்லிக்குச் சென்றதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான விஷயங்களை முன்னெடுக்கிறார் என்கிற அர்த்தத்தில் ராகுல் பேசியுள்ளார். அவர் பேசியதை எடிட் செய்து தோசையைப் பற்றி ராகுல் பேசியுள்ளதாகத் தவறாகப் பரப்புகின்றனர். 

ராகுல் காந்தி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

ராகுல் காந்தி தோசை குறித்துப் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது. மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவதையும் பிறகு டெல்லி சென்று நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகச் செயல்படுவதையும் பற்றியே ராகுல் பேசியுள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க