YouTurn

தரைவழி சாலையில் யூடர்ன் இருக்கும் போது தனி பாலம் எதற்கு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

தரைவழி சாலையில் யூடர்ன் இருக்கும் போது தனி பாலம் எதற்கு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டைடல் பூங்காவில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே சாலையில் அமைந்துள்ள ஒரு வழி யூடர்ன் பாலம் இது. தரைவழியே இருக்கும் யூடர்ன் எதிர் திசையில் வருபவர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பரவிய செய்தி

The U-Turn Bridge 

image.png

Instagram Link / Archived Link

விரிவான விளக்கம்

இந்தியாவிலேயே சென்னையில் தான் யூடர்ன் செய்வதற்காக தனி பாலம் கட்டப்பட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த வீடியோவில் உள்ள இடத்தை பற்றி முதல் தேடிப் பார்த்தோம். முதலில் இது குறித்து கூகுள் மேப்பில் தேடியப் போது, டைடல் பூங்காவில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே சாலையில் அமைந்துள்ள ஒரு வழி யூடர்ன் பாலம் என்பது தெரியவந்தது. 

image.png


இந்த பாலம் குறித்து மேலும் தேடிய போது, தினகரன் ஊடகத்தில் பிப்ரவரி 25, 2025 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள போக்குவரத்து சமிக்ஞையில் தற்போது வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டு, டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடி செலவில் U வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையினை கடக்க ரூ.11.30 கோடி செலவில் திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலை சாலையின் (West Avenue Road) குறுக்காக ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதையடுத்து அந்த வீடியோவில் தரைச் சாலையில் இருக்கும் யூடர்ன் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்தும் கூகுள் மேப்பில் பார்த்த போது, தரைவழியே இருக்கும் யூடர்ன் எதிர் திசையில் வருபவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை பார்க்கமுடிந்தது. இப்பகுதியை கடந்து செல்வதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் நீடித்து வந்தநிலையில், இந்த பாலத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.

image.png


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோவில் உள்ள பாலம் டைடல் பூங்காவில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே சாலையில் அமைந்துள்ள ஒரு வழி யூடர்ன் பாலமாகும். அதே போல் தரைவழியே இருக்கும் யூடர்ன் எதிர் திசையில் வருபவர் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அடிப்படை புரிதலின்றி சிலர் தவறாக வீடியோவை பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க