யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றின் பழைய புகைப்படமாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மரங்கள் நிறைந்திருக்கும் காட்டிற்கு நடுவில் தோண்டப்பட்டிருக்கும் கல் குவாரி ஒன்றின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘இந்த கல்குவாரி தமிழ்நாட்டில் இருப்பதாகவும், இது கடந்த திமுக ஆட்சியில் தோண்டப்பட்டது’ என்றும் தவெக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
Define Dravida Model...😡👇🏻🤦🏻 pic.twitter.com/R2vSTHWRGL
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது.

2019 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகமான குவாரிகள் இருப்பதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் குன்னத்துநாடு, மூவாற்றுப்புழா ஆகிய தாலுகாக்களில் அதிகமான குவாரிகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த புகைப்படத்தில் இருக்கும் கல்குவாரி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது என்பது தெரியவருகிறது.
முடிவு:
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கல்குவாரி ஒன்றின் பழைய புகைப்படத்தை திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று தவறாக பரப்புகிறார்கள்.
