யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.
பரவிய செய்தி
Please let us know why @V_Senthilbalaji was sitting in the Ministers Meeting for interim budget ?
ஏன் மாண்புமிகு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்?



விரிவான விளக்கம்
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு திமுக அரசு இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்யமுடியும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவிருக்கும் திட்டங்கள், அதற்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்து ‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியும் ‘குமுதம்’ செய்தித்தளமும் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் ’செந்தில் பாலாஜி’-யும் இடம்பெற்றிருந்தார். இதனை சுட்டிக்காட்டி, அமைச்சராக இல்லாத செந்தில் பாலாஜி எப்படி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியும்? என்று அதிமுக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
@tn_factcheck and @youturn_in pls clarify
Please let us know why @V_Senthilbalaji was sitting in the Ministers Meeting for interim budget ?
ஏன் மாண்புமிகு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்? pic.twitter.com/XEZKrMIFsi
அமைச்சரவை கூட்டம் தொடங்கியது#MKStalin | #TNBudget pic.twitter.com/lJljdRWSxx
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, ‘Knowledge and News Network’ என்ற செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காண்கிறோம்.

2024 அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த இந்த செய்தியில், பரப்பப்படும் இந்தப் புகைப்படம் இருப்பதைக் காண்கிறோம். அச்செய்தியில், இந்த புகைப்படம் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடிய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் 23-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/6XfUercU6G
மேலும், சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்து தேடினோம். பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்து ’தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தின்’ அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதை காண்கிறோம். அந்தப் புகைப்படத்தில் செந்தில் பாலாஜி இல்லை என்பதையும் பார்க்கிறோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, செந்தில் பாலாஜி சமீபத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற புகைப்படம் 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெரியவருகிறது.
முடிவு:
2024ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை கொண்டு சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன ‘புதிய தலைமுறை’, ‘குமுதம்’ போன்ற ஊடகங்கள். இதனைக் கொண்டு அமைச்சராக இல்லாத செந்தில் பாலாஜி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள்.