YouTurn

வைகோ சொன்னதை தவறாக மொழி பெயர்த்து வெளியிட்ட ‘PTI’ செய்தி முகமை!

வைகோ சொன்னதை தவறாக மொழி பெயர்த்து வெளியிட்ட ‘PTI’ செய்தி முகமை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’ஆட்சியில் பங்கு (power-sharing) என்பது வாய்ப்பில்லை’ என்று வைகோ கூறியதை ‘தொகுதி பங்கீடு (seat sharing) இல்லை’ தவறாக மொழி பெயர்த்து செய்தி வெளியிட்டுள்ளது ‘PTI’ செய்தி முகமை.

பரவிய செய்தி

"DMK will form government, there will no seat-sharing”, says MDMK leader Vaiko amid Congress leaders demanding power-sharing in alliance. - PTI News Agency.


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி கட்சிகள், கூட்டணி அமைப்பது தொகுதி பங்கீடு செய்வதை ஆகியவை குறித்து பேசி வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தற்போது முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறி வருவது குறித்து பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது’ என்று கூறியிருந்தார். 


இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “DMK will form government, there will no seat-sharing” என்று கூறியதாக PTI செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 



உண்மை என்ன? 


PTI செய்தி முகமை வெளியிட்டுள்ள அந்த செய்தி வீடியோவில், ”எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெரும். அதனால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே அங்கே இடம் கிடையாது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகிறார். 


அதாவது, ’ஆட்சியில் பங்கு அல்லது கூட்டணி ஆட்சிக்கு (power-sharing in alliance)’ வாய்ப்பில்லை என்கிறார். இதனை PTI செய்தி முகமை தவறாக மொழி பெயர்த்து ”DMK will form government, there will no seat-sharing” என்று வெளியிட்டுள்ளது. 


அதாவது வைகோ ‘ஆட்சியில் பங்கு சாத்தியமில்லை’ என்று கூறியதை ‘தொகுதி பங்கீடு இல்லை’ என்று  தவறாக வெளியிட்டுள்ளது PTI செய்தி முகமை. 


முடிவு: 


’ஆட்சியில் பங்கு அல்லது கூட்டணி ஆட்சிக்கு (power-sharing) வாய்ப்பில்லை’ என்று வைகோ கூறியதை  ‘தொகுதி பங்கீடு (seat sharing) இல்லை’ தவறாக மொழி பெயர்த்து செய்தி வெளியிட்டுள்ளது ‘PTI’ செய்தி முகமை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க