யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக உள்ளது. இதை எடிட் செய்து “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை“ என்று அவர் கூறியதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இவர் மட்டுமல்ல , இவரது கணவர் விஜயகாந்தும் இது போன்ற அடிப்படை புரிதலற்ற தட்டையான நிலைப்பாடுகள் கொண்டவர் தான். அவர் நல்லவர் , சோறுபோட்டார் என்பதெல்லாம் அரசியல் தலைவருக்கு தகுதியாகிவிடாது.

விரிவான விளக்கம்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்றும், இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்றும், உடனே அனைத்து சாதி சான்றிதழ்களும் ரத்து செய்ய வேண்டு எனவும், சலுகைகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவர் மட்டுமல்ல , இவரது கணவர் விஜயகாந்தும் இது போன்ற அடிப்படை புரிதலற்ற தட்டையான நிலைப்பாடுகள் கொண்டவர் தான் . அவர் நல்லவர் , சோறுபோட்டார் என்பதெல்லாம் அரசியல் தலைவருக்கு தகுதியாகிவிடாது . pic.twitter.com/7enjSGedxu
உண்மை என்ன?
வைரலாகும் நியூஸ் கார்ட் சன் நியூஸ் ஊடகம் வெளியிட்டதாக பரவிய நிலையில், அவரகளது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது செம்டம்பர் 6, 2025 அன்று இது தொடர்பான நியூஸ் கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. செங்கோட்டையனின் பேச்சு அதிமுகளின் உட்கட்சி விவகாரம் என்பதால் கருத்து கூற முடியாது- பிரேமலதா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#அரசியல்POST | “சாதிவாரி கணக்கெடுப்பு தேவை இல்லை” - பிரேமலதா விஜயகாந்த்#SunNews | #DMDK | #Castecensus | #PremalathaVijayakanth pic.twitter.com/k2zpg43ryZ
இதையடுத்து வைரலாகும் நியூஸ் கார்ட்டில் எஸ்.சி, எஸ்.டி என்று சாதிகளைக் குறிப்பிட்டு பிரேமலதா கருத்து கூறியதாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியானது.
இதை உறுதி செய்ய, அவர் அளித்த பேட்டியை தேடிப் பார்த்தோம். புதிய தலைமுறை ஊடகத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு.,பிரேமலதா பதில்” என்று தலைப்பில் வெளியாகியிருந்தது. அதை பார்த்த போது, அந்த பேட்டியிலும் அவர் எங்கும் எஸ்.சி, எஸ்.டி குறித்து பேசியிருக்கவில்லை என்பதை அறியமுடிந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக உள்ளது. இதை எடிட் செய்து “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை“ என்று அவர் கூறியதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.