YouTurn

விழுப்புரம் கோவிலில் உள்ள பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அரசு அகற்றியதாக வதந்தி பரப்பும் நாதகவினர்!

விழுப்புரம் கோவிலில் உள்ள பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அரசு அகற்றியதாக வதந்தி பரப்பும் நாதகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

10 வருடங்களாக விழுப்புரம் மாவட்டம் சடையாண்டி குப்பம் கிராமத்தில் தமிழீழ தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் வீரப்பனாருக்கு குல தெய்வ கோவிலில் சிலை வைத்து குல தெய்வமாக வணகியுள்ளோம். தற்போது சிலைகளை அகற்ற திராவிட மாடல் உத்தரவிட்டதாக தெரிகிறது.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் சடையாண்டி குப்பம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி சிலைகளுடன் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரின் சிலைகளை அரசு அகற்ற உத்தரவிட்டத்தை அடுத்து, சிலைகள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறி 33 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று நாம் தமிழர் கட்சியினரால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்படுகிறது.

மேலும் அந்த வீடியோவில், பரவி வரும் இந்த செய்தி குறித்து தினத்தந்தி ஊடகத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து New Indian Express ஊடகத்தில் கடந்த 2015 ஜூன் 22 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.

அதில், "நாகப்பட்டினத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பொல்கைநல்லூரில் கடந்த 2015 ஜூன் 4-ம் தேதி பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் பிரபாகரன் சிலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அய்யனார் கோவிலில் திறப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சிலைகளை மாற்றுமாறு கிராமவாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் காவல்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் LTTE இலச்சினை மற்றும் சிலை வடிவமைப்பில் மட்டும் அப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால், 2019 ஆம் ஆண்டே கோவிலில் பிரபாகரனின் சிலையை அகற்றி அங்கு காடுவெட்டி குருவின் சிலையை வைத்துள்ளனர்.



மேலும் பரவி வரும் தினத்தந்தி செய்தி வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், Thanthi Tv யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ "விழுப்புரம் அருகே பிரபாகரன், வீரப்பன் சிலையை அகற்ற காவல்துறை உத்தரவு - தந்தி டிவி" என்ற தலைப்பில் 2015 ஜூன் 21 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில், "விழுப்புரம் அருகே பிரபாகரன் மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரின் சிலைகளை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சடையாண்டி குப்பம் கிராமம் எல்லைப் பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு சாமி சிலைகளுடன் பிரபாகரன் மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரின் சிலைகளும் வைக்கபட்டிருந்தது. இது குறித்து கண்டமங்கலம் போலிஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிலைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பூஜைகள் செய்து சிலைகளை அகற்றிவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்ததையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


இதன் மூலம் 2015 இல் தினத்தந்தி ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ள பழைய வீடியோவை, நாம் தமிழர் கட்சியினர் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ என்று கருதி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் அங்குள்ள சிலைகளை அரசு அகற்றவில்லை என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் படிக்க: ஶ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை மீது பாம்புகள் எனப் பரவும் போலி வீடியோ!

மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பெரியார் சிலை நிறுவப்பட்டதின் வரலாறு !

முடிவு:

நம் தேடலில், விழுப்புரம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அரசு அகற்றிதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க