யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொடுக்க வைத்திருந்த குளோப் ஜாமினில்! சிறுநீர் கழித்த ஜெய் சீரக சங்கி.. அட கருமாந்திரம் பிடிச்சவனுங்களா!
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதற்கு வைத்திருந்த குளோப் ஜாமுனில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கலப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் வைரலாகப் பரவி வந்துள்ளது.

Ashiq Billota Official என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டு, இந்த வீடியோ எடுத்தவர் குறித்த விபரங்கள் தெரிந்தால் இதில் குறிப்பிடுங்கள், நாங்கள் அவர் பெயரை சேர்த்துக்கொள்கிறோம் என்பது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Instagram Link:
மேலும் பரவி வரும் வீடியோவின் முழு வீடியோவை, Aijaz Bin ishaq என்பவரது எக்ஸ் பக்கத்திலும் காண முடிந்தது. அதில் வீடியோவின் 0:08 வது நிமிடத்தில் அந்த நபர் கையில் பாட்டில் வைத்திருப்பதும், அதிலிருந்து தண்ணீர் கீழே விழுவதும் தெளிவாக தெரிகிறது.

இதன் மூலம் பாட்டிலை மறைத்து வைத்து, சிறுநீர் கழிப்பது போல சித்தரிக்கப்பட்ட போலி வீடியோவை, உண்மையான வீடியோ என்று நம்பி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் 2022ல் இருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ, எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: முஸ்லீம் வியாபாரி ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிப்பு வீடியோ !
இதற்கு முன்பும் போலியான பல சித்தரிப்பு வீடியோக்களை உண்மையாக நடந்தது என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வந்தனர். அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: உத்தரப் பிரதேசத்தில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
முடிவு:
நம் தேடலில், கோவிலில் பக்தர்களுக்கு கொடுக்கும் குளோப் ஜாமுனில் சிறுநீர் கழித்த நபர் எனப் பரவும் வீடியோ, போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
கருமத்த https://t.co/bU3V2YT1ry
— அன்பு (@ManithiC) March 7, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
फ़ूड जिहाद के बाद इस #जिहाद का क्या नाम? pic.twitter.com/BCkzY0ovO6
— Dr. Richa Rajpoot (Modi ka Parivar) (@doctorrichabjp) December 2, 2022