
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
எப்போதும் நெற்றியில் திருநீற்றை அணிந்து இருக்கும் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முகத்தை பாழ் நெற்றியாக காட்டும் அளவிற்கு கீழ்த்தரமான போட்டோஷாப் வேலையை சன் நிறுவனம் செய்திருக்கிறது இப்படிப்பட்ட அல்பசந்தோஷத்திற்கு சொந்தக்காரர்கள்தான் திராவிட மாடலின் அதிபதிகள் @Dayanidhi_Maran https://t.co/EmetvFi7u9
— Kalyan Raman (மோடியின் குடும்பம்) (@KalyaanBJP_) May 13, 2024
அதில், பயன்படுத்தப்பட்டுள்ள பிரக்ஞானந்தாவின் புகைப்படத்தில் அவரது நெற்றியில் இருந்த திருநீறு போட்டோஷோப் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண் ராமன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே படம் 2023, ஆகஸ்ட் 24ம் தேதி மாக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா தொடர்பாக ‘NDTV Sports’ இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லை.
மேற்கொண்டு பிரக்ஞானந்தாவின் புகைப்படங்கள் பலவற்றை இணையத்தில் தேடிப் பார்த்ததில் அவரது நெற்றியில் திருநீறு இல்லாத படங்களை காண முடிந்தது. அப்படி 2023, ஆகஸ்ட் மாதம் ’தி நியூஸ் மினிட்’ தளத்தில் வெளியான செய்தியில் உள்ள படத்திலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லை.

’ChessBase India’ யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவிலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் பொட்டு இல்லாமல் காண முடிகிறது. இப்படி திருநீறு வைத்துக் கொண்டும் வைக்காமலும் உள்ள பிரக்ஞானந்தாவின் பல புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன. ஆனால், சன் நியூஸ் வேண்டும் என்றே பிரக்ஞானந்தாவின் நெற்றியில் இருந்த திருநீற்றை போட்டோஷோப் மூலம் அழித்தது எனப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் வாக்கிற்காக நெற்றியில் திருநீறு வைப்பதில்லை எனப் பரவும் பழைய படங்கள் !
பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும் போலி மதச்சார்பின்மைக்காக எடப்பாடி பழனிசாமி நெற்றியில் திருநீறு வைப்பது இல்லை எனப் பரப்பப்பட்டது. அவர் எப்போதும் போல திருநீறு வைக்கிறார் என முன்னரே யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!
நெற்றியில் திருநீறு வைப்பதும் அது வியர்வையில் அழிவதும் ஒரு இயல்பான நிகழ்வு. அத்தகைய இயல்பான நிகழ்வைக் கொண்டு வலதுசாரிகள் புதுப்புது அர்த்தங்களைக் கற்பிக்க முற்படுகின்றனர்.
முடிவு:
பிரக்ஞானந்தா பற்றி செய்தி வெளியிட்ட சன் நியூஸ் அவரது நெற்றியில் இருந்த திருநீற்றை போட்டோஷோப் மூலம் அழித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் கூறியது தவறான தகவல். அப்புகைப்படம் 2023ம் ஆண்டு NDTV இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா நெற்றியில் பொட்டு இல்லாத படங்களும் இணையத்தில் உள்ளன.