YouTurn

காவல் நிலையத்தில் புகார் அளிக்க புதிய விதிமுறை என்று தவறாகப் பரவும் பதிவு!

காவல் நிலையத்தில் புகார் அளிக்க புதிய விதிமுறை என்று தவறாகப் பரவும் பதிவு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காவல்நிலையத்தில் புகார்கொடுக்க ஆவணங்கள் எதுவும் கட்டாயமில்லை. மேலும் தற்போது புதிய குற்றவியல் சட்டங்கள் (BNSS) நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்றும், WhatsApp / Email போன்ற மின்னணு முறையிலும் புகார் கொடுக்க முடியும். புகார் பதிவு செய்யும் போது சம்பவ விவரம், தேதி/இடம், மொபைல் எண் போன்ற தகவல்களை சரியாக நிரப்ப வேண்டியது மட்டுமே அவசியம்.

பரவிய செய்தி

இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு,  ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். - காவல்துறை உத்தரவு.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

ஜனவரி 24, 2026 முதல் காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு,  ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் வழிமுறைகள் குறித்து தேடினோம். அப்போது Times Of India ஊடகத்தில், ”Under BNS, FIR anywhere, 14-day rider and WhatsApp complaints” என்ற தலைப்பில் ஜூலை 3, 2024 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில்  புதிய குற்றவியல் சட்டங்கள் (BNSS) நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்றும், WhatsApp / Email போன்ற மின்னணு முறையிலும் புகார் கொடுக்க முடியும். புகார் பதிவு செய்யும் போது சம்பவ விவரம், தேதி/இடம், மொபைல் எண் போன்ற தகவல்களை சரியாக நிரப்ப வேண்டியது மட்டுமே அவசியம். புகார் கொடுக்கப்பட்டப்பின்பு காவல்துறையினருக்கு விவரங்கள் தேவைப்பட்டால், கையொப்பம் உள்ளிட்ட மற்ற விவரங்களைப் பெறலாம் என்று காவல்துறையினருக்கு வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து வைரலாகும் பதிவில் ஜனவரி 24, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை என்றால் இன்றைய தேதிக்கு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ்நாடு காவல்துறையின் இணையதளப்பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் Register Online Complaint என்ற பக்கத்தை கிளிக் செய்து, புகார் அளிக்கும் முறை குறித்து பார்த்தோம். அப்போது பெயர், பிறந்த தேதி, முகவரி, என்ன சம்பவம், நிகழ்ந்த தேதி, நிகழ்ந்த இடம் ஆகியவற்றை மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. அதில் எங்கும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று எதுவும் கேட்கப்படவில்லை. 

முடிவு: 

நம் தேடலில்,  காவல் நிலையத்தில் புகார்கொடுக்க ஆவணங்கள் எதுவும் கட்டாயமில்லை. எனவே 24.01.2026 முதல் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,  Passport மற்றும் PAN கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலுடன், செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும் எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்று உறுதியானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க