YouTurn

பிரதமர் மோடியின் தாயார் வசித்த வீடு குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல் !

பிரதமர் மோடியின் தாயார் வசித்த வீடு குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

P.M.மோடிஜி அவர்களின் தாயார் வசித்த வீடு. நம்ம தமிழ் நாட்டு கவுன்சிலர் கூட இந்த வீட்டில் வசிக்க மாட்டார். நம் பிரதமரை எண்ணி நாம் பெருமைகொள்வோம். இது மாதிரியான தேசியத்திற்கென தன்னை அர்பனிப்பவரை நம் தமிழ் நாட்டில் கால் பதிக்க விட மாட்டார்களாம்.

X link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மிக எளிமையான விட்டில் வசித்ததாக 30 வினாடி வீடியோ ஒன்றினை மோடி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவில் ‘Sagar thakur vlog’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு தேடியதில் 2022, டிசம்பர் 24ம் தேதி அந்த யூடியூபில் பக்கத்தில் தற்போது பரவக் கூடிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 



மோடியின் வீடு குறித்துத் தேடியதில், ‘இந்தியா டுடே’ இணையதளத்தில் ‘வத்நகர் (Vadnagar): பிரதமர் மோடி தனது குழந்தைப் பருவத்தை டீ விற்று, பெரிய கனவுகளுடன் கழித்தார்’ என்கிற தலைப்பில் ஒரு புகைப்படத் தொகுப்பு பதிவிடப்பட்டுள்ளது. 

அதில்,  ‘வத்நகரில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீடு’ என கீழ்காணும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ளதும், இந்தியா டுடே தளத்தில் உள்ளதும் ஒரே வீடுதான். ஆனால், மோடி பிரதமராக இருக்கும் போது அவரது தாயார் இந்த வீட்டில் இல்லை. 



நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் 2001, அக்டோபர் மாதம் முதல் 2014, மே மாதம் வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்படி முதல்வராக இருந்த போது 2012, செப்டம்பர் 17ம் தேதி அவரது பிறந்தநாளன்று தனது தாயாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ‘Desh Gujarat HD’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பரவக் கூடிய வீடியோவில் இருக்கும் வீடும் இதில் இருக்கக் கூடிய வீடும் வெவ்வேறானவை. 



அந்த செய்தியில் காந்தி நகரில் உள்ள தனது தாயாரிடம் மோடி வாழ்த்து பெற்றதாகவே கூறப்பட்டுள்ளது. பரவக் கூடிய வீடியோவில் உள்ள வீடு வத்நகரில் (Vadnagar) உள்ளது. மோடி 2012ல் தனது தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற வீடு காந்தி நகரில் உள்ளது. இவ்விரு இடங்களும் இடைப்பட்ட தொலைவு சுமார் 70 கி.மீ.  



பின்னர் 2014, ஜூலை மாதம் மோடியின் தாய் ஹீராபென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் புதிய வீட்டிற்கு வந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் தான் ஹீராபென் வசித்து வருவதாகவும் ‘Zee News’ யூடியூப் பக்கத்தில் வெளியான செய்தியின் நிலைத்தகவலில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குச் சென்று மோடி அவரது தாயைப் பார்த்து வந்த வீடியோக்களும் அவரது அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் உள்ளது. 

இவற்றில் இருந்து மோடியின் தாய் வசதிகள் இன்றி எளிய வீட்டில் வசித்ததாகப் பரவும் வீடியோவில் உள்ள வீட்டில், அவர்கள் மோடியின் சிறு வயதில் இருந்தது  என்பதை அறிய முடிகிறது. அவர் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த போது அவரது தாய் வேறு வீட்டில் இருந்துள்ளார். 

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடியின் தாய் வசித்த வீடு எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது மோடியின் சிறு வயதிலிருந்த வீடு. அவர் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த போது அவரது தாயார் வேறு வீட்டில் இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க