YouTurn

ஒரே நாளில் வெவ்வேறு ஆடைகளில் வந்து ஆய்வு செய்த பிரதமர் மோடி எனப் பரவும் தவறான புகைப்படங்கள்!

ஒரே நாளில் வெவ்வேறு ஆடைகளில் வந்து ஆய்வு செய்த பிரதமர் மோடி எனப் பரவும் தவறான புகைப்படங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இவை ஒடிசா ரயில் விபத்து மற்றும் குஜராத் மோர்பி பால விபத்து ஆகியவற்றின் போது எடுக்கப்பட்டவை. வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து, நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ஒரே சம்பவத்தில் - நான்கு விதமான ஆடைகளில் பிரதமர் நரேந்திர மோடி 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒரு பயணி மட்டும் காயங்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதனையடுத்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 13) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும், அவர் வெவ்வேறு ஆடைகளில் வந்து அங்கு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


புகைப்படத்தில், பிரதமர் மோடி விதவிதமான ஆடைகளில் ஆய்வு மேற்கொள்வதைப் போன்று காட்டப்பட்டுள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது. 


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது. 


முதல் புகைப்படம் மற்றும் உடைந்து கிடக்கும் விமானத்தை பார்ப்பது போன்று உள்ள மூன்றாவது புகைப்படம் ஆகியவை மட்டும் தான், பிரதமர் மோடி அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டவை என்பதை செய்தியின் மூலம் அறிய முடிகிறது. 



இரண்டாவது இருக்கும் புகைப்படம், கடந்த 2022-ல் குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் இடிந்து, நூற்றுக்கும் மேற்போட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது. இதை “BBC” வெளியிட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. 



இதே போன்று, இறுதியாக உள்ள புகைப்படம், கடந்த 2023-ல் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது. 



இந்நிலையில் வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது  எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் அவர் வெவ்வேறு ஆடைகளில் வந்து அகமதாபாத்தில் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், அகமதாபாத்தில் வெவ்வேறு ஆடைகளில் வந்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி பரவும் புகைப்படங்கள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க