YouTurn

இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள்!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

யூட்யூப் தளத்தில் உள்ள Gaming Video-களையும், இணையத்தில் சுற்றி வரும் பழைய வீடியோகளையும் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடக்கும் மோதலுடன் இணைத்து தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில், பாகிஸ்தானின் ஊடுருவல் சதி முறியடிப்பு. 7 பேர் சுட்டுக்கொலை?



Archive Link 


இந்திய எல்லைக்குள் நுழையவிருந்த பாகிஸ்தானின் அவாக்ஸ் போர் விமானத்தை வெறி கொண்டு தாக்கி சுட்டு வீழ்த்திய இந்தியா.


image.png


Link


கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தும் காட்சி.


image.png


Link

விரிவான விளக்கம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 7ஆம் தேதியன்று ‘Operation Sindoor’ என்று பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் வான்வழி தாக்குதல் நடந்த முயன்றதாகவும், அதனை இந்தியா முறியடித்தாகவும், மேலும் பாகிஸ்தான் நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் பற்றி மோதலை குறிப்பிட்டு செய்தி ஊடகங்களும், சமூக வலைத்தள பயனர்கள் சில வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.





உண்மை என்ன?


Claim 1: ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில், பாகிஸ்தானின் ஊடுருவல் சதி முறியடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக ‘தந்தி டிவி’ வெளியிட்ட News Card.


உண்மை: பரப்பப்படும் News Card-ன் வலதுபுறம் உள்ள படத்தைக் கொண்டு ‘Reverse Image Search’ முறையில் தேடுகையில், ‘Compared Comparison’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் குறிப்பிட்டுள்ளதன் படி இந்த வீடியோ ‘Arm A - 3’ என்ற video game சம்பந்தமானது என்பது தெரியவருகிறது. 


image.png


இதே Gaming Videoவை  ‘Operation Sindoor’-ன் போது எடுக்கப்பட்டது என்று சமூக வலைத்தளத்தில் சிலரால் தவறாக பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும், News Card-ன் இடதுபுறம் உள்ள படத்தைக் கொண்டு தேடுகையில், பாகிஸ்தானின் ’Sabir Shakir’ என்ற பத்திரிகையாளரின் ‘எக்ஸ்’ தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. மே 7ஆம் தேதியே இந்த வீடியோவை அவர்  ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 


image.png


ஆனால் ’THE TIMES OF INDIA’ செய்தியின் படி, ’மே 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி எல்லை பாதுகாப்பு படையால் முறியடிக்கப்பட்டதாக’ தெரியவருகிறது. ஆனால் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு கிட்டதட்ட 44 மணிநேரத்திற்கு முன்பாகவே இந்த வீடியோ பாகிஸ்தான் பத்திரிக்கையாளரால் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து இந்த வீடியோவிற்கும் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி எல்லை பாதுகாப்பு படை முறியடித்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பது தெரிகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, Gaming Video மற்றும் பழைய வீடியோ ஆகியற்றிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி ‘தந்தி டிவி’ News Card வெளியிட்டுதுள்ளது என்பது உறுதியாகிறது. 


Claim 2: இந்திய எல்லைக்குள் நுழையவிருந்த பாகிஸ்தானின் அவாக்ஸ் போர் விமானத்தை வீழ்த்திய இந்தியா!


உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், அதே ’Compared Comparison’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவையும் காணமுடிந்தது. இதுவும்  ‘Arm A - 3’ என்ற video game சம்பந்தமான வீடியோதான். 


image.png


Gaming Videoவை பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொல்லி தவறாக பரப்புகிறார்கள்.


Claim 3: கராச்சி துறைமுகம் மீது இந்திய போர்க்கப்பல் தாக்குதல் நடத்தும் காட்சி என்று பரப்பப்படும் வீடியோ.


உண்மை: பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Military Freaks’ என்ற பேஸ்புக் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ 2024 அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. 



7 மாதங்களுக்கு முன்பிருந்தே சமூக வலைத்தளத்தில் இருக்கும் இந்த பழைய வீடியோ கராச்சி துறைமுகம் மீது இந்திய போர்க்கப்பல் தாக்குதல் நடத்துவதாக தவறாக பரப்பப்படுகிறது. 


முடிவு:


யூட்யூப் தளத்தில் உள்ள Gaming Video-களையும், இணையத்தில் சுற்றி வரும் பழைய வீடியோகளையும் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடக்கும் மோதலுடன் இணைத்து தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க