YouTurn

காடுவெட்டி குரு இருந்த பதாகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருப்பது போன்று பரவும் புகைப்படம்!

காடுவெட்டி குரு இருந்த பதாகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருப்பது போன்று பரவும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாமக தொண்டர்கள் இருவர் வைத்துள்ள பதாகை ஒன்றில், பாமகவைச் சேர்ந்த “குருநாதன் என்கிற காடுவெட்டி குரு” என்பவரின் புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, பதாகையில், “If you are bad, I’m your dad“ என்று குறிப்பிட்டுள்ளவாறு தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

If you are bad, I’m your dad

image.png

X Link | Archived Link 

விரிவான விளக்கம்

வன்னியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்றது. அப்போது If you are bad, I’m your dad என்று எழுதி, ராமதாஸ் புகைப்படம் இருப்பது போன்ற பதாகை ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவின் keyframeகளை வைத்து தேடி பார்த்தோம். அப்போது பாட்டாளி மகன் என்ற எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் புகைப்படத்தை tag செய்து ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்டிருந்த பதிவை பார்க்கமுடிந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலாக பாமகவைச் சேர்ந்த “குருநாதன் என்கிற காடுவெட்டி குரு” என்பவரின் புகைப்படமே இடம்பெற்றிருந்தது.


மேலும் தேடி பார்த்த போது, பித்தன் என்ற பக்கத்தில் இருந்தும், இது தான் உண்மையான புகைப்படம் என்று, காடுவெட்டி குரு புகைப்படம் இருந்த பதாகையை பதிவிடப்பட்டிருந்தது. 


பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவு காரணமாக மே 25, 2018 அன்று மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது புகைப்படம் இருந்த பதாகையை எடிட் செய்து, ராமதாஸ் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்து தவறாக பரப்புகின்றனர். 


முடிவு: 

நம் ஆய்வில், மாநாட்டில் பாமக தொண்டர்கள் இருவர் வைத்துள்ள பதாகை ஒன்றில், பாமகவைச் சேர்ந்த “குருநாதன் என்கிற காடுவெட்டி குரு” என்பவரின் புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து, “If you are bad, I’m your dad“ என்று குறிப்பிட்டு ராமதாஸ் புகைப்படத்தை வைத்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க