YouTurn

முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 70 வயதில் 25 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

பரவிய செய்தி

உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் வசித்து வரும் நபர் முகமது ஷகீல். இவர் தனது மகன் இறந்த 5 நாட்களுக்கு பிறகு, தனது மருமகளை திருமணம் செய்துக்கொண்டார்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் வசித்து வரும் நபர் முகமது ஷகீல். இவர் தனது மகன் இறந்த 5 நாட்களுக்கு பிறகு, தனது மருமகளை திருமணம் செய்துக்கொண்டதாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது சமயம் மலையாள ஊடகப் பக்கத்தில் நவம்பர் 7,2017 அன்று "70 வயது முதியவர் 25 வயது பெண்ணை மணந்தார்" என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அசாமைச் சேர்ந்த ராஜேஷ் குமார் ஹிம்தசிங்கா, தன்னை விட 45 வயது இளைய பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும், இது சமூக ஊடகப்பக்கங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் vavuniyanet என்ற ஊடகப் பக்கத்திலும் "25 வயதுப் பெண்ணை திருமணம் செய்த 70 வயது தொழிலதிபர்!!" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் அசாமை சேர்ந்த கோடீஸ்வரர் ராஜேஷ்குமார் ஹிமாத்சின்கா, இவரது மனைவி இறந்ததையடுத்து, தன்னை விட 45 வயது வித்தியாசம் உள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்றும், இவரின் பெயரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரின் பெயரின் ஒரே மாதிரி இருந்ததால், சமூக வலைதளங்களில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் நவம்பர் 12,2017 அன்று BB News ஊடகப்பக்கத்தில் "This 70 year old man married such a young girl, you will be shocked to know the truth" என்ற தலைப்பில் இது குறித்து செய்து வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

நம் தேடலில், பரவி வரும் புகைப்படம், 2017ஆம் ஆண்டு  அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் ஹிமாத்சின்கா, 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது எடுக்கப்பட்டதாகும். இதை உத்தரப் பிரதேஷத்தில் முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக தவறாக பரப்புவது தெரியவந்தது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க