யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
அதென்னடா குல்லா போட்டுத்தான் சாப்பிடணுமா?! எங்க பிரசாதமே சாப்பிடக்காணோம்! விபூதி பூச வைக்கலாமா?! எப்டிலாம் ஈனபொழப்பு பொழைக்க வேண்டியிருக்கு சில முதுகெலும்பற்றவர்க்கு!

விரிவான விளக்கம்
ரமலான் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இஸ்லாமியர்களைப் போல் தொப்பி அணிந்துகொண்டு பிரியாணி உண்ணுபது போன்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

உண்மை என்ன ?
பரவி வரும் இந்த புகைப்படம் ஏதேனும் செய்தி வெளியாகியிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். கமல்ஹாசனின் அனைத்து சமூக வலைதளப்பக்கங்களிலும் தேடிப் பார்த்ததில், இது குறித்தான எந்த புகைப்படங்களும், செய்திகளும் கிடைக்கவில்லை. இதையடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
𝘛𝘩𝘶𝘨 𝘏𝘢𝘢𝘴𝘢𝘯 𝘐𝘛 𝘞𝘪𝘯𝘨 என்ற எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இந்த புகைப்படம் முதன்முதலில் பதிவிடப்பட்டிருந்தது. ரமலான் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறி மார்ச் 31ஆம் தேதி இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
Wishing you all a joyful and blessed Eid 😊💐#EidMubarak #Ramadan2025 https://t.co/OeWSXmDSjG pic.twitter.com/u7bKY1lWDR
இது உண்மை என்பதை அறிய, பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இது 99.9% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது.

முடிவு :
நம் தேடலில், கமல்ஹாசன் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களைப் போல் தொப்பி அணிந்துகொண்டு பிரியாணி உண்ணுபது போன்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.