யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
"எரிமலை காரணமாக இருள் சூழும் இந்தியா"
"10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை
இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும்
இந்திய வானிலை ஆய்வு மையம்

விரிவான விளக்கம்
10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்தது. இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் என்றும், எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"எரிமலை காரணமாக இருள் சூழும் இந்தியா"
"10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை
இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும்
இந்திய வானிலை ஆய்வு மையம் pic.twitter.com/2vixAnRIu9
உண்மை என்ன?
வைரலாகும் வீடியோவின் keyframeகளை வைத்து ஆராய்ந்தபோது, அது கடந்த நவம்பர் 19ஆம் தேதி Intel Net என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தின் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இந்தோனேசியாவில் சிமேரு எரிமலை வெடித்து சிதரியதாகவும், அருகிலுள்ள மக்கள் உடனே வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
🚨🗻Mount Semeru erupts in Indonesia, sending massive pyroclastic flows kilometers down its slopes. Authorities raise alert levels and urge nearby residents to evacuate. pic.twitter.com/rOfLT9qq9j
அதே போல் Nanana365 என்ற எக்ஸ் பக்கத்திலும், நவம்பர் 19 அன்று சிமேரு எரிமலை மீண்டும் வெடித்ததாகவும், எரிமலைக்குழம்பு 13 கி.மீ. உயரத்திற்கு அருவியாகப் பாய்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
🔴INDONESIA 🇮🇩| Mount #Semeru experienced another eruption on Wednesday Nov 19, with lava flows cascading down its slopes for 13km, deadly gases and a 2 km high ash column. Damage has been reported due to the volcanic flows. The government has declared a 7-day state of emergency. pic.twitter.com/SPAWWDE7cI
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை என்பது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Westernpacificweather.com என்ற இந்தோனேசியா ஊடகத்தில் பரவி வரும் புகைப்படத்துடன் நவம்பர் 19 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்ததாகவும், எரிமலையில் இருந்து 18 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The SUN என்ற ஊடகத்தில் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்துச்சிதறிய காட்சிகள் என்று குறிப்பிட்டு வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

இதையடுத்து எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்தது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். Afar Communication Bureauவின் சமூகவலைப்பக்கத்தில் நவம்பர் 24, 2025 அன்று எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்தது குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதற்கும் பரவி வரும் புகைப்படத்திற்கு எந்த தொடர்புமில்லை என்பதை அறியமுடிந்தது.
எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”Ethiopian volcano eruption sends ash to Delhi, hitting flight operations” என்ற தலைப்பில் BBC ஊடகத்தில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் எரிமலை வெடிப்பின் சாம்பல் தற்போது வட இந்தியாவை அடைந்து சீனாவை நோக்கி நகர்வதாகவும், இது இந்தியாவின் தட்ப வெப்ப நிலையையோ, காற்றின் தரத்தையோ எந்த வகையிலும் பாதிக்க வாய்ப்பில்லை எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் இந்தியாவில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்களின் பாதையும் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு:
நம் தேடலில், இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.