YouTurn

வன்முறையை தூண்டிய உளவாளிகளை கைது செய்த ஈரான் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

வன்முறையை தூண்டிய உளவாளிகளை கைது செய்த ஈரான் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2016ம் ஆண்டில் நடந்த “ஈரான் புரட்சி தின” அணிவகுப்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய நாடகத்தின் புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை தற்போது 'ஈரானில் வன்முறையைத் தூண்டிய உளவாளிகள் கைது' எனக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ஈ+ரா+னி+ல் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்து திருட்டு தனமாக உளவு பார்த்து கலவரத்தை செய்த கொடியவர்களை ஈ+ரா+னி+ய குடியரசுப்படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

image.png

Facebook Link / Archived Link 

விரிவான விளக்கம்

ஈரானில் தற்போது நிகழ்ந்து வரும் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாக உளவாளிகள் சிலரை ஈரான் பாதுகாப்புப் படை கைது செய்ததாக புகைப்படம் ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 



உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். Israel hayomன்ற ஊடகப்பக்கத்தில் “Iran celebrates revolution by re-enacting capture of US sailors” என்ற தலைப்பில் பிப்ரவரி 12, 2016 அன்றே பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுருந்தது. அதில்  2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரானின் இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்டு கார்ப்ஸ் (Islamic Revolutionary Guard Corps Navy) அமெரிக்க கடற்படை மாலுமிகளை சிறைபிடித்தனர். அந்த ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த “ஈரான் புரட்சி தின”  பேரணியின் போது அமெரிக்க மாலுமிகளை சிறைபிடித்த காட்சியை பாதுகாப்புப் படை வீரர்கள் நடித்துக் காட்டினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, AP Newsroom ஊடகப்பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்துடன் பிப்ரவரி 11, 2016 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதிலும்  2016ம் ஆண்டில் நடந்த “ஈரான் புரட்சி தின” அணிவகுப்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய நாடகத்தின் புகைப்படம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கடந்த 2016ம் ஆண்டில் நடந்த “ஈரான் புரட்சி தின” அணிவகுப்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய நாடகத்தின் புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை தற்போது 'ஈரானில் வன்முறையைத் தூண்டிய உளவாளிகள் கைது' எனக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க