YouTurn

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆக்கூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் விபத்து ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட பேருந்தின் புகைப்படம் இது.

பரவிய செய்தி

கடைசியில PINK BUS தான் ஜெயிக்கும்

X Link | Archived Link

விரிவான விளக்கம்

மகளிர் கட்டணமில்லா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அரசு பேருந்தில் சரியான வசதிகள் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்ற நோக்கித்தில் இந்த செய்தி பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தில் புதியதலைமுறையின் லோகோவுடன், 24-10-2025 தேதியும், மயிலாடுதுறை என்று குறிப்பிட்டு இருந்ததை காணமுடிந்தது. அதை வைத்து புதியதலைமுறையின்  சமூக ஊடகப்பக்கங்களில் இந்த செய்தியை தேடிப் பார்த்தோம். அப்போது அக்டோபர் 24 அன்று மதியம் 2.45 மணிக்கு இந்த செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் ”ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு; மின் கம்பம் மீது பஸ் மோதியதால் பரபரப்பு” என்ற தலைப்பில் அக்டோபர் 24 அன்று தினத்தந்தி ஊடகத்திலும் பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு நகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஆக்கூர் அருகே சென்றபோது, ஓட்டுநர் கணேசனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் தீவிரமாக முயன்று பஸ்சை ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பஸ் நின்றது. இந்த சம்பவத்தில் பேருந்தின் மண்ணாடி உடைந்து நொறுங்கியது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, அரசுப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் விபத்து ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட பேருந்தின் புகைப்படம் இது. இதனை தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க