யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆதன் தமிழ் நெறியாளர் மாதேஷ் தவெகவில் இணைந்ததாக பரவும் AI புகைப்படம்!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஆதன் தமிழ் ஊடகத்தின் நெறியாளர் மாதேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
😂😂😂😂ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல pic.twitter.com/EcH3X4uOui
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து நெறியாளர் மாதேஷ் தனது சமூக வலைதளப்பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது அவரது எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் புகைப்படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில் பரப்பப்படும் இந்தப் படம் உண்மையானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுருந்தார்.
I want to clarify that the image being circulated is not real.
It is AI-generated and morphed.
Kindly respect my dignity and stop spreading false content ✍️ pic.twitter.com/6rD78c6bP4
இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை தேடிப் பார்த்தோம். அப்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் இ.சி.ஆர்.பி.சரவணன் 21 டிசம்பர் 2025 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில் வழக்கறிஞர் சத்ய குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் என்று குறிப்பிட்டு, விஜயுடன் சத்ய குமார் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். அந்த புகைப்படத்தை தான் AI மூலமாக எடிட் செய்து பரப்புவது உறுதியானது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ஆதன் தமிழ் ஊடகத்தின் நெறியாளர் மாதேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக பரவும் புகைப்படம் போலியானது. இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.