YouTurn

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடையும் மக்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடையும் மக்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் இருந்தே “கர்பலாவுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வரவேற்கப்பட்டனர்“ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது.

பரவிய செய்தி

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் ஈரானில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் ஈரான் பாகிஸ்தான் எல்லை  டஃப்டன் வழியாக பெரிய எண்ணிக்கையில் பாகிஸ்தானுக் குள் திரும்புகின்றனர். ஈரானியர் எவரும் உள்ளே நுழைந்து விடாமல் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. ஈரானில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள், தஃப்தான் எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுவதாக அந்த காணொளி கூறுகிறது. பரவி வரும் வீடியோவில் எல்லை வாயில் திறந்தவுடன் பெண்கள் உட்பட ஏராளமானோர் உள்ள நுழைவதை காணலாம். 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Hum Ali Walay என்ற யூடியூப் பக்கத்தில் Taftan Border” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 10, 2024 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே, அது நடந்து கொண்டிருக்கும் மோதலுக்கு முந்தையது என்பதைக் காட்டுகிறது.


இது குறித்து மேலும் தேடிய போது, ஆகஸ்ட் 30, 2023 அன்று Rizvi_writess என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில் தஃப்தான் எல்லையின் தற்போதைய நிலைமை என்றும், யாத்ரீகர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்ததை காணமுடிந்தது. 


இதை வைத்து தேடி பார்க்கும் போது, ஈரானிய பத்திரிகை ஊடகம், ”Arbaeen2023: 10k Pakistani pilgrims to enter Iran Tuesday” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29, 2023 அன்று ஒரு செய்தி வெளியிட்டுயிருந்தது. அதில் 10,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் தஃப்தான் எல்லை வழியாக அர்பயீனுக்குச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் TEHRAN TIMES ஊடகம், ஆகஸ்ட் 18, 2024 அன்று ”Over 16,000 Pakistani pilgrims enter Iran for Arbaeen journey to Karbala” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முஹர்ரம் மற்றும் அர்பெய்ன் போன்ற மத நிகழ்வுகளின் போது தஃப்தான் எல்லையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது . இந்த நேரங்களில், பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் ஈராக்கின் கர்பலாவில் உள்ள இமாம் உசேன் ஆலயத்திற்கு அஞ்சலி செலுத்த இந்த பாதை வழியாக செல்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்த்து. 

image.png


முடிவு : 

எனவே, இந்தத் தகவலின் அடிப்படையில் வைரலாகி வரும் காணொளி சமீபத்தியது அல்ல. மாறாக 2023 முதலே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கும், இதற்கும் எந்த தொடர்புமில்லை. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க