YouTurn

2023 உலகக்கோப்பை தோல்வியால் கோலி, ரோஹித் சர்மா படங்களை ரசிகர்கள் தாக்குவதாகப் பரவும் பழைய வீடியோ !

2023 உலகக்கோப்பை தோல்வியால் கோலி, ரோஹித் சர்மா படங்களை ரசிகர்கள் தாக்குவதாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு ரசிகர்கள் என்றைக்கும் இதுபோல ஒரு செயலை செய்யமாட்டாங்க.

Twitter Link

விரிவான விளக்கம்

கமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த நவம்பர் 19 அன்று நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறை உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

இந்நிலையில், இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து டிவியில் ஒட்டப்பட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் புகைப்படங்களை மக்கள் சாலைகளில் நின்று தாக்குவது போன்ற 14 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





மேலும் இதே வீடியோ BOL News யூடியூப் பக்கத்திலும் "2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்கள் தங்கள் டிவியை உடைத்தனர்" என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 20 அன்று பகிரப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் இந்த வீடியோ ‘Informative Stuff’ என்ற முகநூல் பக்கத்தில் கடந்த 2022 நவம்பர் 12 அன்று 'Ind vs Eng' என்ற ஹேஷ்டேக்குகளுடன் பகிரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே நாளில் மற்றொரு முகநூல் பக்கத்திலும் இதே வீடியோ பகிரப்பட்டிருந்தது.



கடந்த 2022 நவம்பர் 10 அன்று நடந்து முடிந்த "டி20 உலகக் கோப்பை 2022" அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ரசிகர்கள் சிலர் கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் பதவி நீக்கம் செய்யக் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆனால் பரவி வரும் இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: டேவிட் வார்னரை பார்த்து ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

இதற்கு முன்பும் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தோடு தொடர்பு படுத்தி பல செய்திகள் தவறாகப் பரவின. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ‘இது கிரிக்கெட் மாஃபியாவான பிசிசிஐ-க்கு எதிரான வெற்றி’ என ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் வதந்தி!

மேலும் படிக்க: உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடி மைதானத்தில் ஊர்வலம் போனதாகப் பரவும் பழைய வீடியோ !

முடிவு :

நம் தேடலில், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, ரசிகர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புகைப்படங்களை தாக்குவதாகப் பரவி வரும் வீடியோ, கடந்த 2022-ல் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க