யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேசிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட விட்ட மக்கள்!

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதனையடுத்து இந்தியா முழுவதுமே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷை மக்கள் விரட்டியதாகக் கூறி 19 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் கூட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் அன்பில் மகேஷிற்கு எதிராக கூச்சலிடுவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2024 மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Servai_media இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ மார்ச் 03 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் கூட்டத்தினர் பலரும், தங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி, நாங்கள் சீட்டு கேட்கும் போது கசக்கிறதா? ஓட்டு கேட்க மட்டும் இனிக்கிறதா? என்பது போன்று சேர்ந்து கூச்சலிடுவதையும் தெளிவாகக் கேட்க முடிகிறது.
இதே போன்று, IND TAMIL 24x7 என்ற யூடியூப் பக்கத்திலும், பெரம்பலூரில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினருக்கு, மக்களவை தேர்தலுக்காக திமுகவில் சீட்டு கொடுக்காததற்காக அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் கூட்டமாக கோஷமிட்டனர் என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.
இதன் மூலம் இது திருச்சியில் அன்பில் மகேஷ் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. பெரம்பலூரில் மக்களவை தேர்தலுக்காக திமுக தரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்டு சமூகத்தினருக்கு சீட்டு ஒதுக்கபடாதது தொடர்பாக மக்கள் கூச்சலிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: தினமலரை நடுநிலை பத்திரிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய பொய் செய்தி !
முடிவு:
திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷிற்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய மக்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

போகிற இடமெல்லாம் விரட்டப்பட்டு வரும் திமுக அமைச்சர்கள்
திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேசிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட விட்ட மக்கள்!#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் pic.twitter.com/zZVOUxhGZU
— Gowri Sankar D - Say No To Drugs & DMK (@GowriSankarD_) April 2, 2024
போகிற இடமெல்லாம் விரட்டப்பட்டு வரும் திமுக அமைச்சர்கள்
திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேசிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட விட்ட மக்கள்! @Anbil_Mahesh#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் pic.twitter.com/RXJgyMPnY9
— Savukku Shankar Army (@Mahi1987Mass) April 2, 2024