YouTurn

விடுதலை புலிகள் பிரபாகரன் உடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

விடுதலை புலிகள் பிரபாகரன் உடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தேசியத் தலைவர் அவர்களுடன்.. தமிழினப் போராளி பசுபதி பாண்டியன் அவர்கள்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன், இளைஞர்கள் பலர் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பசுபதி பாண்டியனும் சேர்ந்து நிற்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் கடந்த 2016-லிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.



இதுகுறித்து தேடியதில், Tamil Guardian ஊடக பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தின், உண்மையான புகைப்படத்தைக் காண முடிந்தது. அதில் பசுபதி பாண்டியன் இருந்த இடத்தில் வேறு ஒருவரின் புகைப்படமே இருந்தது.



இதே போன்று ஈழத் தமிழர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும், இதன் உண்மையான புகைப்படம் கடந்த 2014 இன் போதே பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது



மேலும் யாழ் என்ற வலைத்தளப் பக்கத்தில் பிரகாரன் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தன. அதில், பரவி வரும் இந்த புகைப்படம் கடந்த 1985-ல் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் உண்மையான புகைப்படத்தை சிலர் பிரபாகரன் உடன் பசுபதி பாண்டியன் இருப்பது போல தவறாக எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பது உறுதியாகிறது.



மேலும் படிக்க: பிரபாகரன் இரத்தம் சிந்திய மண் என் பூஜை அறையில் உள்ளது என சீமான் பேசியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

மேலும் படிக்க: விடுதலை புலிகள் பிரபாகரன் என் நெஞ்சில் சாய்ந்து தூங்குவார் என சீமான் கூறினாரா ?

முடிவு:

நம் தேடலில், விடுதலை புலிகள் பிரபாகரன் உடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க