YouTurn

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்தார்களா? உண்மை என்ன?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்தார்களா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முஸ்லிம் அல்லாத நபர்களும் கல்வி அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.

பரவிய செய்தி

சுதந்திர இந்தியாவில் 1947-77 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

’இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகான 20 ஆண்டுகள் காலத்திற்கு  (1947 - 1977) நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது, முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான், நமது பாடப்புத்தகத்தில் அவுரங்கசீப், அக்பர், பாபர் போன்ற மன்னர்கள் போற்றப்படுகிறார்கள். இந்து மன்னர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கிறது’ என்று பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.

உண்மை என்ன?


சுதந்திர இந்தியாவில் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் குறித்து இணையத்தில் தேடியபோது,  இந்திய அரசாங்கத்தின் ‘பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின்அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இது குறித்த விவரங்களை காணமுடிந்தது. 



அதில் குறிப்பாக 1947 - 1977 ஆகிய ஆண்டுகளில் ஒன்றிய கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் குறித்து தேடினோம். டாக்டர் கே. எல். ஸ்ரீமாலி, டாக்டர் திரிகுணா சென், டாக்டர் வி. கே. ஆர். வி. ராவ், சித்தார்த்த சங்கர் ரே போன்ற முஸ்லிம் அல்லாத நபர்களும் கல்வி அமைச்சர்களாக இருந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இதிலிருந்து, முஸ்லிம்கள் அல்லாதவர்களும் கல்வி அமைச்சர்களாக இருந்துள்ளார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகிறது.


முடிவு:


நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த (1947 - 1977) காலத்தில்  முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்தார்கள் என்று தவறாக பரப்பப்படுகிறது. மேலும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்ததால் தான் முஸ்லிம் மன்னர்களை பற்றிய வரலாற்றை மட்டும் பாட திட்டத்தில் கொண்டு வந்தார்கள், இந்து மன்னர்கள் பற்றிய வரலாற்றை இருட்டடிப்பு செய்தார்கள் என்று மத வெறுப்பு கண்ணோட்டத்தில் பாஜகவினர் பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க