YouTurn

லஞ்சம் குறித்து புகாரளிப்பவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு ‘தினத்தந்தி' ஊடகம் வெளியிட்ட போலி செய்தி!

லஞ்சம் குறித்து புகாரளிப்பவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு ‘தினத்தந்தி' ஊடகம் வெளியிட்ட போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் அளித்த Toll Free நம்பர் (18004251555) என்று பரவி வரும் எண்ணானது, “காஜா பாம்” நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே 

“மக்கள் சர்காரின் ஆட்டம் ஆரம்பம்”

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

“தமிழ்நாட்டில் எந்தவொரு அரசுத் துறையிலும் உங்களிடம் வெறும் ரூ. 1000 லஞ்சம் கேட்கப்பட்டால் கூட, மக்கள் ஆதாரங்களுடன் 18004251555 என்ற Toll Free எண்ணுக்கு தாராளமாகப் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக முறையான ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் குடிமக்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். ஆனால் இந்த பக்கத்தில் இது குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

image.png


இது குறித்து மேலும் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது Toll Free எண் என்று பரவி வரும் செய்தியில் இடம்பெற்ற எண் குறித்து தகவல் கிடைத்தது. “காஜா பாம்” நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் 18004251555 பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இது காஜா பாம் நிறுவனத்திற்கு சொந்தமான எண் என்பது உறுதியானது. 

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, லஞ்சம் கேட்கப்பட்டால் மக்கள் ஆதாரங்களுடன் 18004251555 என்ற Toll Free எண்ணுக்கு தாராளமாகப் புகார் அளிக்கலாம் என்று ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானவை. பரவி வரும் செய்தியில் உள்ள எண் காஜா பாம் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க